நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு சென்டாக்கில் 12,287 பேர் விண்ணப்பிப்பு
நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு சென்டாக்கில் 12,287 பேர் விண்ணப்பிப்பு
UPDATED : ஜூன் 04, 2026 05:36 PM
ADDED : ஜூன் 04, 2026 05:37 PM
புதுச்சேரி:
நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு சென்டாக்கில் 12 ஆயிரத்து 287 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டில் தொழில்முறை படிப்பிற்கு 6,490 இடங்களும், பாதுகாப்பு குற்றவியல் மற்றும் தடய அறிவியல் போன்ற படிப்புகளுக்கு 4,320 இடங்கள் என, மொத்தம் 10 ஆயிரத்து 810 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கு சென்டாக் இணையதளத்தில் 13, 999 பதிவு செய்துள்ளனர். இவர்களில், 10,540 பேர் புதுச்சேரியை சேர்ந்தவர். பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் 1,740 பேர், என்.ஆர்.ஐ., 5, ஓ.சி.ஐ., 2 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதில், கலை அறிவியல் படிப்புகளுக்கு 2,636 பேர், தொழில்முறை படிப்புகளுக்கு 5,643 பேர், இரு பாடப்பிரிவுகளுக்கும் 4,008 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தொழில்முறை படிப்புகளில் உயிரியல் சார்ந்த படிப்புகளுக்கு 4,703 பேர், பி.பார்ம்., படிப்புகளுக்கு 4,158 பேர், பி.எஸ்.சி., விவசாயம் தோட்டக்கலை படிப்பிற்கு 2.165 பேர், பி.டெக்., படிப்பிற்கு 5,992 பேர், சட்ட படிப்புகளுக்கு 1,430 பேர், ஏ.என்.எம்., படிப்பிற்கு 882 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
துணை மருத்துவம் சார்ந்த பட்டயப் படிப்பிற்கு 1,548 பேர், பி.வி.ஓ.சி., படிப்பிற்கு 762 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
