sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் தேர்வு முறைகேடு வழக்கு: ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நீட் தேர்வு முறைகேடு வழக்கு: ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நீட் தேர்வு முறைகேடு வழக்கு: ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு


UPDATED : ஜூலை 11, 2024 12:00 AM

ADDED : ஜூலை 11, 2024 05:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 11, 2024 12:00 AM ADDED : ஜூலை 11, 2024 05:10 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை ஜூலை 18ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

நாடு முழுதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, மே 5ம் தேதி நடந்தது. இதன் முடிவு, ஜூன் 4ம் தேதி வெளியானது. இந்த தேர்வில், இதுவரை இல்லாத அளவுக்கு, 67 பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். வினாத்தாள் கசிந்தது, ஆள் மாறாட்டம் நடந்தது என, பல முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த விவகாரம் தொடர்பான, 30க்கும் மேற்பட்ட வழக்குகளை தொகுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. நீட் தேர்வு முறைகேடு வழக்கில், தேசிய தேர்வு முகமை பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

தேர்வு ரத்து என்பது தவறிழைக்காத மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகும் என பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு மீதான விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us