தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் மகளிர் கல்லுாரியில் 18வது பட்டமளிப்பு விழா

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் மகளிர் கல்லுாரியில் 18வது பட்டமளிப்பு விழா

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் மகளிர் கல்லுாரியில் 18வது பட்டமளிப்பு விழா


UPDATED : மார் 27, 2026 06:39 PM

ADDED : மார் 27, 2026 06:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 27, 2026 06:39 PM ADDED : மார் 27, 2026 06:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:
நாமக்கல் - திருச்சி சாலையில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லுாரியில், 2,000க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லுாரியில், 18வது பட்டமளிப்பு விழா நடந்தது.

கல்லுாரி முதல்வர் மாதவி தலைமை வகித்தார். தர்மபுரி மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் மலர், சிறப்பாளராக பங்கேற்றார். தொடர்ந்து, பெரியார் பல்கலை அளவில் முதுநிலை வரலாறு, பொருளியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டியல் துறைகளில் முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் பெற்ற மாணவியருக்கு பட்டம் வழங்கி பாராட்டினார்.

அதையடுத்து, 640 இளநிலை மாணவியர், 226 முதுநிலை மாணவியர் என மொத்தம், 866 பேருக்கு பட்டம் வழங்கினார். துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us