sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாற்றுத்திறனாளி டெய்லர் மகள் மாநகராட்சி பள்ளியில் 2ம் இடம்

/

மாற்றுத்திறனாளி டெய்லர் மகள் மாநகராட்சி பள்ளியில் 2ம் இடம்

மாற்றுத்திறனாளி டெய்லர் மகள் மாநகராட்சி பள்ளியில் 2ம் இடம்

மாற்றுத்திறனாளி டெய்லர் மகள் மாநகராட்சி பள்ளியில் 2ம் இடம்


UPDATED : மே 13, 2024 12:00 AM

ADDED : மே 13, 2024 09:21 AM

Google News

UPDATED : மே 13, 2024 12:00 AM ADDED : மே 13, 2024 09:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வண்ணாரப்பேட்டை:
சென்னை மாநகராட்சி, சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி சந்தோஷினி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 488 மதிப்பெண்கள் பெற்று, மாநகராட்சி பள்ளியில் 2ம் இடம் பிடித்தார்.

அதே பள்ளியில் படிக்கும் கார்த்திகேஸ்வரி, 500க்கு 486 மதிப்பெண்கள் பெற்று மாநகராட்சி அளவில் 3ம் இடம் பெற்றுள்ளனர். இதில், கார்த்திகேஸ்வரி, கணிதம், அறிவியல் ஆகிய இரு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றார்.

மாணவியர் சந்தோஷினி, கார்த்திகேஸ்வரிக்கு, பள்ளி நிர்வாகம் சார்பில் ஆசிரியர்கள் சால்வை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் பாராட்டினர்.

இது குறித்து, தமிழ் ஆசிரியை ஹீல்டா கூறுகையில், பள்ளியில், 10 பேர் கணிதத்தில் 99 மதிப்பெண் பெற்றுள்ளனர். 22 மாணவர்கள், 90 மதிப்பெண்களுக்கும் மேல் பெற்றுள்ளனர். எங்கள் பள்ளியில் சந்தோஷினி, 488 மதிப்பெண்கள் முதலிடமும்; கார்த்திகேஸ்வரி, 486 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும்; ஹரிப்ரியா, 480 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளார் என்றார்.

இது குறித்து மாணவி சந்தோஷினி கூறுகையில், அப்பா கணேசன் டெய்லராக உள்ளார்; மாற்றுத்திறனாளி ஆவார். அம்மா சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.

பெற்றோர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தால், அதிக மதிப்பெண் பெற்றுள்ளேன். மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறேன். தமிழக அரசு உதவி செய்ய வேண்டும்; யாராவது உதவ முன்வந்தால், நல்ல முறையில் படித்து, மருத்துவராகி விடுவேன் என்றார்.

இவரது மேற்படிப்பிற்கு உதவ விரும்புவோர், 94451 65994 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

எலக்ட்ரீஷியன் மகள் சாதனை

திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர், எர்ணீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரர்; எலக்ட்ரீஷியன். அவர் மனைவி வளர்மதி. இவர்களுக்கு, ஸ்வேதா என்ற மகள் உள்ளார்.

ஸ்வேதா, திருவான்மியூர் அரசு உதவி பெறும் பள்ளியில், 10ம் வகுப்பு படித்தார். இதில், கணிதம், அறிவியல் பாடங்களில், 100 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். தமிழில், 96, ஆங்கிலம், சமூக அறிவியலில் தலா, 99 என, 494 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார்.

வறுமை சூழலிலும், மாணவி ஸ்வேதா, அதிகளவில் மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்திருப்பதை, ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இவரது மேற்படிப்பிற்கு உதவ விரும்புவோர், 75500 50893 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

- நமது நிருபர் குழு -







      Dinamalar
      Follow us