பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் 250 பேர்
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் 250 பேர்
UPDATED : ஏப் 18, 2011 12:00 AM
ADDED : ஏப் 18, 2011 11:32 AM
பொள்ளாச்சியில், அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் திருத்தும் மையத்தில், 70 ஆயிரம் விடைத்தாள் திருத்தப்படவுள்ளன. இதில், 250 பேர் ஈடுபட்டுள்ளனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையமாக அமைக்கப்பட்டுள்ளது. மையத்தில், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களின் விடைத்தாள் திருத்தப்படவுள்ளன. மொத்தம் 70 ஆயிரம் விடைத்தாள் மையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: விடைத்தாள் திருத்தும் மையத்தில், அனைத்து பாடங்களுக்கான 70 ஆயிரம் விடைத்தாள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், முதன்மை தேர்வர்களாக 24 பேரும், 240 உதவி தேர்வர்களாகவும் செயல்படவுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி வரும் 23ம் தேதி துவங்குகிறது. வரும் 21ம் தேதி மாதிரி விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
