யு.பி.எஸ்.சி., மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு: 2,526 பேர் தேர்ச்சி
யு.பி.எஸ்.சி., மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு: 2,526 பேர் தேர்ச்சி
UPDATED : நவ 06, 2026 01:40 PM
ADDED : நவ 06, 2026 01:48 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி:
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்காக நடத்தப்பட்ட மெயின் தேர்வு முடிவை யு.பி.எஸ்.சி., வெளியிட்டது.
இந்த தேர்வு ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 30 வரை நடந்தது. இத்தேர்வில் 2,526 தேர்ச்சி பெற்றனர்.
அவர்களுக்கு இறுதி கட்டமாக நேர்முக தேர்வு நடத்தப்பட உள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இதற்காக வயது, கல்வி தகுதி, ஜாதி, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி என்பதற்கான அசல் சான்றிதழ்களை தயாராக வைக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
