தேசிய அறிவியல் விருதுகள்: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு கவுரவம்
தேசிய அறிவியல் விருதுகள்: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு கவுரவம்
UPDATED : டிச 24, 2025 07:59 AM
ADDED : டிச 24, 2025 08:03 AM
புதுடில்லி:
2025-ம் ஆண்டுக்கான தேசிய அறிவியல் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, டில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கந்தாந்த்ரா மண்டபத்தில் வழங்கினார்.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைத் துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய விஞ்ஞானிகளுக்கு, விஞ்ஞான் ரத்னா, விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவா, விஞ்ஞான் குழு ஆகிய நான்கு பிரிவுகளில் மொத்தம் 24 விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விருதுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகள் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. சென்னை ஐஐடி பேராசிரியர் தாளப்பில் பிரதீப் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புத் துறையில், பேராசிரியர் ஸ்வேதா பிரேம் அகர்வால் கணிதம் மற்றும் கணினி அறிவியல் துறையில், பேராசிரியர் மோகனசங்கர் சிவபிரகாசம் வேதியியல் துறையில் தேசிய அறிவியல் விருதுகளை பெற்றனர்.

