தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பழநி கோயிலில் பொறியாளர் பணி: செப்., 30க்குள் விண்ணப்பிக்கலாம்

பழநி கோயிலில் பொறியாளர் பணி: செப்., 30க்குள் விண்ணப்பிக்கலாம்

பழநி கோயிலில் பொறியாளர் பணி: செப்., 30க்குள் விண்ணப்பிக்கலாம்


UPDATED : செப் 15, 2013 12:00 AM

ADDED : செப் 15, 2013 11:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 15, 2013 12:00 AM ADDED : செப் 15, 2013 11:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி கோயிலில் காலியாக உள்ள பொறியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் செப்.,30 க்குள் விண்ணப்பிக்கலாம் என, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பழநி கோயிலில் 200க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. முதற்கட்டமாக மெக்கானிக், சிவில், எலக்ட்ரானிக் போன்ற பிரிவுகளில் காலியாக உள்ள பொறியாளர், உதவிப் பொறியாளர், போர்மென்கள் போன்ற ஒன்பது பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

கல்வித்தகுதியாக, அந்தந்த பிரிவுகளில் டிப்ளமோ அல்லது பி.இ., முடித்திருக்க வேண்டும். செப்.,30 விண்ணப்பிக்க கடைசி நாள். மேலும் விபரங்களுக்கு கோயில் இணை ஆணையர், பழநி தண்டாயுதபாணி திருக்கோயில் அலுவலகம், பழநி - 624 601. 04545- 242 236. என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

கோயில் இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம் கூறியதாவது: "பழநி கோயிலில் முதற்கட்டமாக மருத்துவமனை, பொறியாளர் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பபடவுள்ளது. விண்ணப்பங்களின் எண்ணிக்கையை பொறுத்து எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். பிற காலிப்பணியிடங்கள் படிப்படியாக விரைவில் நிரப்பப்படும்," என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us