தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு 'மெனு'வில் மாற்றம்

அரசு பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு 'மெனு'வில் மாற்றம்

அரசு பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு 'மெனு'வில் மாற்றம்


UPDATED : நவ 25, 2026 05:46 PM

ADDED : நவ 25, 2026 05:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 05:46 PM ADDED : நவ 25, 2026 05:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
''அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின், 'மெனு'வில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா கூறி உள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:


அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு சுத்தமாக, சத்தாக உள்ளதா என்பதை ஆராய்வதற்கு சிறப்பு குழு அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்த குழு உணவின் தரம், உணவு செய்யப்படும் விதம் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்கும்.

அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு சூடான உணவு வழங்கப்பட வேண்டும். இதை, பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். தற்போது, திங்கள் முதல் வியாழன் வரை காய்கறி சாம்பார், சாதம்; வெள்ளிக்கிழமை பிசிபேலாபாத், சனிக்கிழமை உப்புமா, வெண் பொங்கல், சப்பாத்தி, பூரி வழங்கப்படுகின்றன.

ஆறு நாட்களும் முட்டை அல்லது வாழைப்பழம் வழங்கப்படுகின்றது. இந்த மெனு அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படுகிறது. சில மாவட்டங்களில் உணவு பழக்கங்கள் மாறுபடுகின்றன.

வட கர்நாடக மாவட்டங்களில் சப்பாத்தி அதிகம் சாப்பிடுகின்றனர். தென் மாவட்டங்களில் கேழ்வரகு களி அதிகம் சாப்பிடுகின்றனர். இதனால், மதிய உணவு மெனுவில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

அந்தந்த மாவட்டங்களின் உணவு பழக்கங்களுக்கு ஏற்ப, மெனு தயார் செய்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us