தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி: புதுச்சேரியில் ஏப்ரல் 4, 5ல் நடக்கிறது கல்வி - வேலை - எதிர்காலத்திற்கு ஒரே குடையின் கீழ் தீர்வு

தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி: புதுச்சேரியில் ஏப்ரல் 4, 5ல் நடக்கிறது கல்வி - வேலை - எதிர்காலத்திற்கு ஒரே குடையின் கீழ் தீர்வு

தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி: புதுச்சேரியில் ஏப்ரல் 4, 5ல் நடக்கிறது கல்வி - வேலை - எதிர்காலத்திற்கு ஒரே குடையின் கீழ் தீர்வு


UPDATED : ஏப் 01, 2026 04:00 PM

ADDED : ஏப் 01, 2026 04:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 01, 2026 04:00 PM ADDED : ஏப் 01, 2026 04:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிரச் செய்யும் மெகா கல்வி திருவிழாவாக 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி புதுச்சேரியில் ஏப்ரல் 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நாட்களில் நடக்கிறது.

'தினமலர்' நாளிதழும், கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களும் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி, 100 அடி சாலை மரப்பாலம் சிக்னல் அருகிலுள்ள சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் அமைந்துள்ள ஏசி அரங்குகளில் பிரமாண்டமாக நடைபெறுகிறது.

பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்வி குறித்து தெளிவான முடிவு எடுக்க உதவும் வகையில் இந்த வழிகாட்டி நிகழ்ச்சி, கருத்தரங்கம், கண்காட்சியுடன் ஒன்று சேர வடிவமைக்கப்பட்டுள்ளது.

தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 06:00 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில், முன்னணி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் 80க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. விண்ணப்பம் செய்வது முதல் சேர்க்கை பெறுவது வரை தேவையான அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்.

“என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?” என்ற கேள்விகளுடன் நிற்கும் மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு முழுமையான வழிகாட்டியாக அமைகிறது. கல்வி ஆலோசகர்கள், தொழில்துறை நிபுணர்கள் மற்றும் அனுபவமிக்க பேராசிரியர்கள் நேரடியாக கலந்து கொண்டு மாணவர்களின் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்களை வழங்க உள்ளனர்.

உடனடி வேலைவாய்ப்பு தரும் படிப்புகள், எதிர்காலத்தில் வளர்ச்சி பெறும் துறைகள், மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் போன்றவை குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்படுகின்றன.

சிவில் சர்வீசஸ் முதல் செயற்கை நுண்ணறிவு வரை பல்வேறு துறைகள் குறித்து நிபுணர்கள் பேச உள்ளனர். குறிப்பாக, கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம், டிசைன், ஆர்க்கிடெக்சர், கம்ப்யூட்டர் சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி, டேட்டா சயின்ஸ், மெட்டாவர்ஸ் போன்ற புதிய தலைமுறை துறைகளில் சாதிக்க தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. ஏ.ஐ. யுகத்தில் தங்களை உருவாக்கிக் கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு.

மேலும், நீட், ஜே.இ.இ., கிளாட், நாட்டா, கேட் போன்ற தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கான தயாரிப்பு முறைகள், அவற்றின் முக்கியத்துவம் மற்றும் புதுச்சேரி சென்டாக் மூலம் நடைபெறும் மாணவர் சேர்க்கை பற்றிய முழுமையான தகவல்களும் வழங்கப்படுகின்றன.

ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி., ஜிப்மர், எய்ம்ஸ் போன்ற நாட்டின் முக்கிய கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான வழிமுறைகளும் விளக்கப்படுகின்றன.

இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பு அம்சம், மாணவர்களுக்கான உதவித்தொகை வாய்ப்புகள் மற்றும் கல்வி உதவிகள் பற்றிய தகவல்கள், பொருளாதார சிக்கல்கள் இருந்தாலும் உயர்கல்வி கனவை அடைய வழிகள் என்ன என்பதையும் மாணவர்கள் இங்கே அறிந்துகொள்ள முடியும்.

பரிசும் உண்டு


கருத்தரங்க அமர்வுகளில் மாணவர்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டு, சரியான பதில்களை வழங்குவோருக்கு லேப்டாப், டேப்லெட், வாட்ச் போன்ற பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

சரியான படிப்பு, சிறந்த கல்லூரி, உறுதியான வேலைவாய்ப்பு, இந்த மூன்றையும் ஒரே இடத்தில் இணைக்கும் கல்வி மேடையாக 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி அமைகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் பெற்றோர் அனைவரும் இலவசமாக பங்கேற்று, தங்கள் எதிர்காலத்தை தெளிவாக திட்டமிட இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இணைந்து வழங்குவோர்


நிகழ்ச்சியை 'தினமலர்' நாளிதழுடன் கோவை ராமகிருஷ்ணா எஜூகேஷன் இன்ஸ்டிடியூஷன், அமிர்தா விஷ்வ வித்யாபீடம், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ருசி பால் நிறுவனம் ஆகியவை இணைந்து வழங்குகின்றன.

இலவச முன்பதிவிற்கு


தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் தினமும் காலை மற்றும் மாலையில் கருத்தரங்கம் நடக்கிறது. இதில் பங்கேற்க 9566777833 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் RGN என்று டைப் செய்து பதிவு செய்யலாம்.

ஸ்டால் புக்கிங்…


தினமலர் வழிகாட்டி ஸ்டால் புக்கிங்கிற்கு 98940 09059; 99449 63834 என்ற மொபைல் எண்களை தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us