பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதல்வர் விஜய்; ரூ.50 லட்சம் பரிசு வழங்கி பாராட்டு
பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதல்வர் விஜய்; ரூ.50 லட்சம் பரிசு வழங்கி பாராட்டு
UPDATED : ஜூன் 09, 2026 10:06 AM
ADDED : ஜூன் 09, 2026 10:10 AM

சென்னை:
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்யை நார்வே செஸ்ஸில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நார்வே செஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்த்தினார். இதன் மூலம் நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் அவர் பெற்றார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இந்த சூழலில், நார்வேவில் இருந்து சென்னை திரும்பிய பிரக்ஞானந்தா, முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, நார்வே செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுடன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் செஸ் விளையாடி மகிழ்ந்தார். தொடர்ந்து, பிரக்ஞானந்தாவுக்கு 50 லட்சம் பரிசை முதல்வர் விஜய் வழங்கினார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பிரக்ஞானந்தா பேசுகையில், “முதல்வருடன் செஸ் விளையாடினேன். அவரே போர்டு எடுத்து வரச்சொல்லி விளையாடினார். நல்லாவே விளையாடினார்,” எனக் கூறினார்.
