தாட்கோ மூலம் வேலைவாய்ப்பு ஒரே நாளில் 710 பேர் தேர்வு
தாட்கோ மூலம் வேலைவாய்ப்பு ஒரே நாளில் 710 பேர் தேர்வு
UPDATED : டிச 13, 2009 12:00 AM
ADDED : டிச 13, 2009 01:25 PM
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட் டங்களைச் சேர்ந்த இரண் டாயிரம் பேர் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா, சென்னை எல் அண்ட் டி, அவினாசி எஸ்.பி. அப்பாரல்ஸ், பெருந்துறை டி.எம். டபிள் யூ.இ.என்.சி., சென்னை ரானே, சென்னை டபிள்யூ. எஸ். இன்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களைச் சேர்ந்த மேலா ளர்கள் வேலைவாய்ப்பு முகாமை நடத்தினர்.
தாட்கோ மேலாண்மை இயக்குனர் சந்திரகாந்த் பி.காம்ளே கூறுகையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்காக, தனியார் நிறுவனங்களை ஒருங்கிணைத்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இடஒதுக்கீடு அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தேர்வு செய்யப்படவில்லை. குறைந்தது 8வது மற்றும் அதற்கும் மேல் படித்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண்கள் பங்கேற்றனர்.
திறமையின் அடிப்படையில் நேர்முகத்தேர்வின் மூலம் 670 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணிப்பயிற்சி காலத்தில் ஊக்கத்தொகையும், தொடர்ந்து வேலைவாய்ப்பும் வழங்கப்படும். இதுதவிர திருச்சி,துவாக்குடியில் உள்ள மாநில உணவக மேலாண்மையின் மூலம் உணவு தயாரித்தல், பரிமாறல், மனைஅலங்காரம், ரொட்டி தயாரித்தல் பயிற்சிக்கு 141 பேரைத் தேர்வு செய்துள்ளோம். விழுப்புரம், புதுக் கோட்டையில் ஏற்கனவே முகாம்கள் நடத்தப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.
தாட்கோ பொதுமேலாளர் சுந்தரமூர்த்தி, மேலாளர்கள் ரத்தினம் (மதுரை), முத்துரத்தினம் (திண்டுக்கல்), கிருஷ்ணமூர்த்தி (தேனி), செல்வராஜ் (பொறுப்பு, ராமநாதபுரம்), வளர்மதி (சிவகங்கை) ஆகியோர் முகாமை ஒருங்கிணைத்தனர்.
