தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமச்சீர் பாடப் புத்தகங்களுக்கு விலை நிர்ணயம்

சமச்சீர் பாடப் புத்தகங்களுக்கு விலை நிர்ணயம்

சமச்சீர் பாடப் புத்தகங்களுக்கு விலை நிர்ணயம்


UPDATED : மே 12, 2011 12:00 AM

ADDED : மே 12, 2011 11:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 12, 2011 12:00 AM ADDED : மே 12, 2011 11:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை: சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்கள் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளன.
நடப்பு கல்வியாண்டில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு, சமச்சீர் கல்வி பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்றாம் வகுப்பு பாடப் புத்தகங்கள் 200 ரூபாய்க்கும், ஆறாம் வகுப்பு பாடப் புத்தகங்கள் 250 ரூபாய்க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டன. இதர வகுப்புகளுக்கு வரும் ஜூன் மாதம், சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வருவதால் அவற்றுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், 1, 6 வகுப்புகள் தவிர்த்து, இதர வகுப்பு பாடப் புத்தகங்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 3, 4, 5ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் ஒரு செட் 250 ரூபாய். சில்லறை விலையில், ஒரு புத்தகம் 60 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்படும். 7, 8 வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் 300 ரூபாய்.


இவை, சில்லறை விற்பனையில் ஒரு பாடப் புத்தகம் 75 ரூபாய் வீதத்தில் விற்பனை செய்யப்படும். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்களுக்கு 350 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில்லறை விலையில், ஒரு பாடப் புத்தகம் 75 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தேர்தல் முடிவுக்குப்பின் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us