தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்.

காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்.

காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்.


UPDATED : மே 13, 2011 12:00 AM

ADDED : மே 13, 2011 12:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 13, 2011 12:00 AM ADDED : மே 13, 2011 12:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு


ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் முதன்முதலாக பெண் ஒருவர் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.


கடந்த 20 ஆண்டுகளாக பயங்கரவாதிகளின் பல்வேறு தாக்குதல்களால் இன்னல்களுக்கு உள்ளான ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், கல்வித்துறை மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2009-ம் ஆண்டில் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் முதன்முதலாக ஷா பைசால் என்ற மருத்துவ மாணவர் ஐ.ஏ.எஸ். பணிக்கு தேர்வானார். இ‌வரே மாநிலத்தின் முதல் ஐ.ஏ.எஸ்.மாணவர்.


இதனையடுத்து, இம்மாநிலத்தில் கடந்த 2010-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் லடாக் பகுதியைச் சேர்ந்த ஒவேஷா இக்பால் என்ற பெண் ஐ.ஏ.எஸ்.ஆக தேர்ச்சி பெற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து மேலும் 5 பேர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று்ள்ளனர். இதன்மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். மாணவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து மாணவி ஓவிஷா இக்பால் கூறுகையில், மாநிலத்தின் முதல் ஐ.ஏ.ஏஸ்.ஆக தேர்வுபெற்ற ஷா பைசால் வெற்றி பெற்றது ஒரு தனி நபரின் சாதனை. அதுவ‌ே எங்களுக்கு முன்மாதிரியாக இருந்தது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us