UPDATED : மே 14, 2011 12:00 AM
ADDED : மே 14, 2011 01:52 PM
முன்னணி பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலக்டரானிக்ஸ் நிறுவனம் பெங்களூருவிலும் வேறு ஒன்றிரண்டு இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்குத் தேவைப்படும் புரொபேஷனரி இன்ஜினியர் பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தகுதி
எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் பிரிவுகளில் ஒன்றில் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை முதல் வகுப்பில் முடித்திருக்க வேண்டும். இவற்றில் தற்போது இறுதியாண்டில் படித்து வருபவரும் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்:
எலக்ட்ரானிக்ஸ் பிரிவு 80 மெக்கானிக்கல் 30 கம்ப்யூட்டர் சயின்ஸ் 40 மொத்தம் 150, வயது ஏப்ரல் 1, 2011 அன்று 25 வயதுக்குள் இருக்க வேண்டும். பணியிடங்கள் பெங்களூரு, காசியாபாத், புனே, ஐதராபாத், சென்னை, மசூலிப் பட்டினம், பஞ்ச்குலா, கோட்வாரா, நவிமும்பை
தேர்வு முறை
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ரூ.500க்கான டி.டி.,யை எடுத்து வைத்துக் கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது கிடைக்கும் பதிவு எண்ணைக் கொண்ட அனுமதித் தாளுடன் தேர்வு எழுத வேண்டும். இது குறித்த முழு விபரங்களை அறிய பார்க்க வேண்டிய இணைய தள முகவரி http://specialtest.in/bel2011/Detailsadv.htm
