UPDATED : மே 14, 2011 12:00 AM
ADDED : மே 15, 2011 06:51 PM
ஆசியாவிலேயே முதல் ஸ்பேஸ் இன்ஸ்டிடியூட் என்ற பெருமையையும், உலகிலேயே விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம், தகவல்கள் குறித்து இளநிலை, முதுநிலை, பிஎச்.டி. பட்டப்படிப்புகளை வழங்கும் ஒரே கல்வி நிறுவனம் என்ற பெருமையையும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் டெக்னாலஜி(I.I.S.T.) பெறுகிறது.
இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி தொடர்பான விஷயங்களில் ஆர்வம் கொண்ட இளைஞர்களை ஊக்குவித்து, விண்வெளி துறை விஞ்ஞானியாகவோ, பொறியாளராகவோ உருவாக்குவதில் இந்தியன் விண்வெளி ஆராயச்சிக் கழகம் ஈடுபட்டுள்ளது.
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, ஐ.ஐ.எஸ்.டி. பி.டெக். பட்டப்படிப்பில் 3 பாடப்பிரிவுகள் வழங்கப்படுகிறது.
1. பி.டெக். பிசிகல் சயின்ஸ். இந்த பாடப்பிரிவில், பிசிகல் சயின்ஸ் பாடப்பிரிவின் அடிப்படை முதல் அனைத்தும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. விண்வெளித் துறையில் பணியாற்றத் தேவையான ஆஸ்ட்ரோனமி, ஆஸ்ட்ரோபிசிக்ஸ், ரிமோட் சென்சிங், எர்த் சிஸ்டம் சயின்ஸ் மற்றும் கெமிக்கல் சிஸ்டம்ஸ் ஆகிய துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
2. பி.டெக்., அவியோனிக்ஸ் ப்ரோக்ராம். பொதுவாக இந்த பாடப்பிரிவில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் போன்ற துறைகள் கற்பிக்கப்படுகிறது. இத்துறை மாணவர்களுக்கு, அடிப்படை அறிவியல், ஏரோஸ்பேஸ் சிஸ்டம், பொருளாதாரம், மேலாண்மை மற்றும் இலக்கியத் துறைகளில் கல்வி கற்பிக்கப்படுகிறது.
3. பி.டெக் ஏரோஸ்பேஸ் பொறியியல். பிளைட் மெக்கானிக்ஸ், தியரி ஆப் மெக்கானிக்ஸ், ஏரோ ஸ்பேஸ் ஸ்ட்ரக்சர், மேனுபேக்சரிங் பிராசஸ், ஆட்டோமெடிக் கன்ட்ரோல் ஆகிய துறைகள் கற்பிக்கப்படுகிறது. இத்துறையை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு, ஏவுகணைகள், ராக்கெட்டுகள், விமானம், செயற்கைகோள் ஏவுகணை போன்றவற்றை தயாரிப்பது, அவற்றில் பணியாற்றுவதற்கு ஏற்ற வகையில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
