தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கிராமப்புற மாணவர்களுக்கு நவீன வசதிகளுடனான கல்வி

கிராமப்புற மாணவர்களுக்கு நவீன வசதிகளுடனான கல்வி

கிராமப்புற மாணவர்களுக்கு நவீன வசதிகளுடனான கல்வி


UPDATED : மே 23, 2011 12:00 AM

ADDED : மே 23, 2011 04:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 23, 2011 12:00 AM ADDED : மே 23, 2011 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி அறிவு புகட்டும் வகையில் திருச்செங்கோட்டில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் துவக்கப்பட்டது எஸ்.கே.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.


பள்ளி செயல்பாடுகள் குறித்து அப்பள்ளியின் நிறுவன பொருளாளர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:
வெங்கடேஸ்வரா அறக்கட்டளையின் கீழ் துவக்கப்பட்டது கந்தம்பாளையத்தில் உள்ள எஸ்.கே.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் மாணவி பிரித்தீகா 1,182 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடத்தை பிடித்துள்ளார். தமிழ் பாடத்தில் 197 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர் இப்பள்ளியில் படித்த மனோஜ்ராஜ் மற்றும் கீர்த்தனா.


பள்ளியில் 1,170 மதிப்பெண்ணுக்கு மேல் 21 பேரும், 1,150க்கு மேல் 77 பேரும், 1,100க்கு மேல் 139 பேரும் ஆயிரத்திற்கும் மேல் 254 பேரும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 14 பேர் இரண்டு பாடங்களிலும் 200க்கு 200 மதிப்பெண் எடுத்துள்ளனர். இவை தவிர, கணிதப் பாடத்தில் 46 பேர், இயற்பியலில் ஏழு பேர், உயிரியலில் எட்டு பேர், கணிப்பொறியியலில் எட்டு பேர் என 83 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.


இருபாலர் பள்ளி என்ற போதிலும் கூட மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனி வகுப்பறைகளியே கல்வி கற்பிக்கப்படுகிறது. தற்சமயம் 3,500 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தனித்தனி விடுதி வசதியும் உள்ளது. சமச்சீர் கல்வி திட்டத்தை பயன்படுத்தி வருகின்ற போதிலும், விளையாட்டு மற்றும் யோகா போன்ற பிற திறன்களை வளர்த்துக்கொள்வதற்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம். நாட்டின் உயரிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி.,களில் சேர்க்கை பெறுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகின்றது. என்ற போதிலும் அவை குறித்த விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை.


பள்ளியின் சிறப்பான கல்வி கற்பித்தலுக்கான நடவடிக்கையிலும், நவீன உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். தனியார் கல்வி பயிற்சி முறைகளை பயன்படுத்துதல், இலேர்னிங் போன்றவற்றிலும் ஆர்வம் செலுத்தப்படுகிறது. நல்ல திறமையான ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் 15 ஆயிரம் ரூபாய் ஊதியம் அளிக்கப்படும் நிலையில், அரசின் தனியார் பள்ளி கட்டண நிர்ணயம் ஏற்புடையதாக இல்லை. மாணவர்களை கண்டிக்கக்கூடாது என்ற நிலை அவர்களை தவறான வழிகளில் ஈடுபடச் செய்ய வாய்ப்பாக அமைகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us