தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழிற்கல்வி விண்ணப்ப விநியோகம் இன்றுடன் முடிகிறது

தொழிற்கல்வி விண்ணப்ப விநியோகம் இன்றுடன் முடிகிறது

தொழிற்கல்வி விண்ணப்ப விநியோகம் இன்றுடன் முடிகிறது


UPDATED : மே 31, 2011 12:00 AM

ADDED : மே 31, 2011 10:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2011 12:00 AM ADDED : மே 31, 2011 10:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு, கடந்த, 16ம் தேதி முதல், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அதிகரித்து, அதிகமான மாணவர்கள் மதிப்பெண்களை குவித்ததால், தொழிற்கல்வி படிப்புகளில் சேர, தீவிர ஆர்வம் காட்டினர். குறிப்பாக, பொறியியல் படிப்புகளில் சேர, மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடந்த, 28ம் தேதி நிலவரப்படி, பொறியியல் படிப்பிற்கு, ஒரு லட்சத்து, 59 ஆயிரத்து, 172 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில், 20 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.மருத்துவப் படிப்புகளுக்கு, 22 ஆயிரம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்.


கடைசி நாளான இன்று, ஏராளமான மாணவர்கள் விண்ணப்பம் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறியியல் படிப்பு கவுன்சிலிங், ஜூலை முதல் வாரத்தில் துவங்கும் என்றும், மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலில், ஜூன் கடைசி வாரத்தில் இருந்தோ அல்லது ஜூலை முதல் வாரத்தில் இருந்தோ துவங்கும் என, கூறப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங், சென்னை, மதுரை, கோவை, நெல்லை ஆகிய நான்கு இடங்களில் நடத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


எனினும், இது குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலையும் வெளியிடவில்லை. இது தொடர்பான அறிவிப்புகள், கவர்னர் உரையில் வெளியிடப்படலாம் என்றும், கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.


மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன் 2ம் தேதிக்குள்ளாகவும், பொறியியல் படிப்பிற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன் 3ம் தேதிக்குள்ளாகவும் சமர்ப்பிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us