UPDATED : ஜூன் 20, 2011 12:00 AM
ADDED : ஜூன் 20, 2011 03:21 PM
இந்தியாவில் இயங்கும் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் பிரம்மிக்கத்தக்க வளர்ச்சி கண்ட பாரத ஸ்டேட்பாங்க் இன்று நாடு தழுவிய அளவில் மிக அதிகமான கிளைகள் உள்ளன. இவ்வளவு சிறப்புகளைப் பெற்ற பாரத ஸ்டேட் வங்கியில் அஸிஸ்டென்ட் மேனேஜர் (சிஸ்டம்ஸ் ) பிரிவில் 100 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த இடங்களுக்கு அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது. பாரத ஸ்டேட் பாங்க்கின் துணை மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க 01.06.2011 அன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி
ஸ்டேட் பாங்க் அஸிஸ்டென்ட் மேனேஜர்சிஸ்டம்ஸ் பதவிக்கு பி.இ., கம்ப்யூட்டர்ஸ், பி.டெக்., கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், எம்.எஸ்.,சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.சி.ஏ., ஆகிய ஏதாவது ஒரு படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்
பாரத ஸ்டேட் பாங்க்கின் துணை மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ. 500/ கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்ற பிரிவினர் ரூ.50/ மட்டும் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிப்பது எப்படி
ஸ்டேட் பாங்க்கின் அஸிஸ்டென்ட் மேனேஜர் (சிஸ்டம்ஸ்) பதவிக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு பல்வேறு வழி முறைகளை இந்த வங்கி கூறுகிறது. அவை அனைத்தையும் இணையதளத்தில் சென்று முழுமையாக அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆன்லைன் பதிவு முறையில் விண்ணப்பிப்பதால் முதலில் உபயோகத்தில் உள்ள உங்களுக்கான பிரத்யேகமான ஒரு இமெயில் முகவரி இருப்பதனையும் உறுதி செய்யவும். சான்றிதழ்களை நேர்காணலின் போது கொண்டு சென்றால் போதுமானது. விண்ணப்பங்களைப் பின் வரும் முகவரிக்கு 07.07.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
முக்கிய தேதிகள்
விண்ணப்பக் கட்டணம் செலுத்த இறுதி நாள்: 27.06.2011
ஆன்லைனில் பதிவு செய்ய இறுதி நாள்: 30.06.2011
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்: 07.07.2011
இணைய தள முகவரி: www.sbi.co.in, www.timesjobs.com, www.statebankofindia.com
