தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகள் தரம் உயர்வு உத்தரவு ரத்து

பள்ளிகள் தரம் உயர்வு உத்தரவு ரத்து

பள்ளிகள் தரம் உயர்வு உத்தரவு ரத்து


UPDATED : ஜூன் 21, 2011 12:00 AM

ADDED : ஜூன் 21, 2011 10:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2011 12:00 AM ADDED : ஜூன் 21, 2011 10:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கான உத்தரவு ரத்தால், ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் நிலை, கேள்விக்குறியாகியுள்ளது.


தமிழகத்தில் கடந்த ஆட்சியின் போது, 344 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இந்நிலையில், புதிய அரசு பொறுப்பேற்றதும், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளை ஆய்வு செய்து, இதற்கான தரம் உயர்வு உத்தரவு திரும்ப பெறப்பட்டது.


இதை தொடர்ந்து, தகுதியான பள்ளிகளின் பட்டியலை தயார் செய்யும்படி அதிகாரிகளுக்கு வாய் மொழி உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக, விருதுநகர் மாவட்டத்தில் தான், 36 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதே பள்ளிகளில் படித்த எட்டாம் வகுப்பு மாணவர்கள், அதே பள்ளியில் தற்போது ஒன்பதாம் வகுப்பில் சேர்த்து உள்ளனர். தற்போது, பள்ளிகளின் தரம் உயர்வு ரத்து செய்யப்பட்டதால், அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இவர்கள் நிலை குறித்து, பெற்றோரும் கவலையில் உள்ளனர். இதனால், கிராம பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள், நகர் பள்ளிகளில் சேர வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாகி உள்ளனர். ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில் மாணவர்களை சேர்க்க, எந்த உத்தரவும் இதுவரை வரவில்லை. மாற்றுச் சான்றிதழை அனைத்து மாணவர்களும் வாங்கி விட்டால், ஒரு வேளை சேர்க்கை நடைபெறும் போது, மாணவர்களே இல்லாத நிலை ஏற்படும். அதனால்தான் மாற்றுச்சான்றிதழ் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்றார்.


மாவட்ட கல்வி அலுவலர் செந்திவேல் முருகனிடம் கேட்டபோது, அரசு உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us