தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விருதுநகர் மருத்துவ கல்லூரி விரைவில் அமையுமா?

விருதுநகர் மருத்துவ கல்லூரி விரைவில் அமையுமா?

விருதுநகர் மருத்துவ கல்லூரி விரைவில் அமையுமா?


UPDATED : ஜூன் 26, 2011 12:00 AM

ADDED : ஜூன் 26, 2011 11:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 26, 2011 12:00 AM ADDED : ஜூன் 26, 2011 11:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு


விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில், அரசு மருத்துவக் கல்லூரி துவக்கப்படும் என்ற அரசு உத்தரவுக்கு பின், எந்த செயல்பாடும் இல்லாததால் பணிகள் தாமதமாகி வருகிறது.


இம்மாவட்டத்தில்

, அரசு மருத்துவக் கல்லூரி துவக்கப்படும் என, 2011 பிப்.,12ல் அரசு அறிவித்தது. அதன்பின், தேர்தல் வந்ததால் எந்த பணிகளும் நடக்காமல் முடங்கின. தற்போது, .தி.மு.., அரசு பொறுப்பேற்றதும், மருத்துவக் கல்லூரிக்கான இடம் தேர்வு குறித்து அமைச்சர், எம்.எல்..,க்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.


கலெக்டர்

அலுவலகம் அருகே, வீட்டு வசதி வாரிய இடம், அருப்புக்கோட்டை ரோட்டில், 58 காலனி எதிரே உள்ள இடம், ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், மருத்துவக் கல்லூரி குறித்து எந்த முன்னேற்றமான செயல்பாடுகளும் அரசு தரப்பில் இல்லை. மருத்துவக் கல்லூரி அமைய, மருத்துவக் கல்லூரி இயக்குனரகம் சார்பில் தனி அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். அதன் பிறகே, ஆக்கப்பூர்வமான பணிகளை துவக்கி செயல்படுத்த முடியும். ஆனால், இதுவரை தனி அலுவலர் நியமிக்கப்படவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us