UPDATED : ஆக 03, 2011 12:00 AM
ADDED : ஆக 03, 2011 10:17 AM
ஓவிய பிரிவு தேர்வில் வரையற்ற, மாதிரி ஓவியம், வண்ணம் தீட்டுதல், வடிவமைத்தல், வரைகணித ஓவியம், மாதிரி அமைத்தல்.
தையல் கலை பிரிவில், ஊசிவேலை உடை தயாரித்தல், பூ தையல் வேலை, தையல்வேலை, இசைப்பிரிவில், இந்திய இசை (வாய்ப்பாட்டு, வயலின், வீணை, புல்லாங்குழல், நாதஸ்வரம், கோட்டுவாத்தியம், பாலக்கோயில்) , இந்திய இசை கூடுதல் செயல்முறை தேர்வில் (வாய்ப்பாட்டு, வயலின், வீணை, புல்லாங்குழல், நாதஸ்வரம், கோட்டுவாத்தியம், பாலக்கோயில்) , நடனப்பிரிவு தேர்வில் நடனம் (பரதநாட்டியம்), அச்சுக்கலைப்பிரிவு தேர்வில் புத்தகம் தைத்து கட்டுதல், புரூப் ரீடர்ஸ் பணி, இயந்திரப்பணி, அச்சிடுவோர் பண்டக பணி, அச்சுக்கோர்ப்போர் பணி மற்றும் விவசாயம் மற்றும் கைத்தறி நெசவு பிரிவுக்கு தேர்வு நடக்கும். கீழ், மேல்நிலை என இருபிரிவாக தேர்வு நடக்கும்.
கல்வி தகுதி: கீழ்நிலை தேர்வு எழுதுவோருக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி அவசியம். மேல்நிலை தேர்வு எழுதுவோர் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: நடன தேர்வுக்கு கீழ்நிலை 57, மேல்நிலை 62 ரூபாய்; இந்திய இசை கூடுதல் செயல்முறை தேர்வுக்கு கீழ்நிலை 27, மேல்நிலை 37 ரூபாய்; ஏனைய பாடங்களுக்கு கீழ்நிலை 37, மேல்நிலை 47 ரூபாய்க்கான ரசீதை (செலான்) கருவூலத்தில் பெற்று, கூடுதல் செயலர் (தொழில்நுட்ப தேர்வு), அரசு தேர்வுகள் இயக்ககம், கல்லூரி சாலை, சென்னை - 600 006க்கு விண்ணப்பிக்கவும்.
அத்துடன் கருவூல ரசீது, கல்வி தகுதி அட்டஸ்டட் சான்று, பிற சான்றிதழ்களில் தலைமை ஆசிரியரிடம் ஒப்புதல் கையெழுத்து பெற்று அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆக., 25க்குள் அனுப்புமாறு, அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
