தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆஸ்திரேலியாவின் பழைய மாணவர்களுக்கான மேதமை விருதுகள்

ஆஸ்திரேலியாவின் பழைய மாணவர்களுக்கான மேதமை விருதுகள்

ஆஸ்திரேலியாவின் பழைய மாணவர்களுக்கான மேதமை விருதுகள்


UPDATED : ஆக 04, 2011 12:00 AM

ADDED : ஆக 04, 2011 03:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2011 12:00 AM ADDED : ஆக 04, 2011 03:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை

: ஆஸ்திரேலியாவில் படித்து தற்போது பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்துவரும் இந்தியர்களுக்கு, பழைய மாணவர்களுக்கான மேதமை விருது(Excellence Award) வழங்கும் விழா ஆகஸ்ட் 3ம் தேதி சென்னையில் நடைபெற்றது.

சென்னையிலுள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடந்த இந்த விருது வழங்கும் விழாவில், ஆஸ்திரேலியாவின் பிராந்திய கல்வி, திறன், பணிகள் மற்றும் பணியிட உறவுகளுக்கான அமைச்சர் செனட்டர் கிறிஸ் இவான்ஸ், விருதுகளை வழங்கினார். ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் படித்து, கலை-கலாச்சாரம், விளையாட்டு, வர்த்தக தலைமை, புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி, சமூக சேவை போன்ற பலவித துறைகளில் சாதனைப் படைத்தவர்களை கவுரவிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் ஆஸ்திரேலிய அரசின் சார்பில், ஆஸ்திரேலியாவிற்கும், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையேயான கல்வித் தொடர்புகளை விளக்கும் வகையில் ஒரு புத்தகமும் வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தில், இந்தியா, பூடான், இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 17 பழைய மாணவர்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

விருது பெற்றவர்கள் விபரம்:

சிறப்பிற்குரிய விருது

- இந்தியா மட்டுமல்லாமல், உலகளவில் புகழ்பெற்ற இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்திக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்திய - ஆஸ்திரேலிய உறவின் மேம்பாட்டிற்கு உழைத்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

வர்த்தக தலைமைத்துவத்துக்கான பழைய மாணவர் விருது

- நேஷனல் ஏவியேஷன் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தின் இயக்குநர் அர்விந்த் ஜாதவ் இந்த விருதினைப் பெற்றார்.

முதல்தர இளையோருக்கான பழைய மாணவர் விருது

- ஆஸ்திரேலியாவின் டெகின் மற்றும் மோனாஷ் பல்கலைகளில் படித்து, சர்வதேச அளவில் மீடியா மற்றும் விளம்பரத் துறைகளில் பணியாற்றும் சகில் ஷ்ரோப் என்பவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சிக்கான பழைய மாணவர் விருது

-
ஹைதராபாத்திலுள்ள டிஎன்ஏ கைரேகை மற்றும் டயக்னாஸ்டிக்ஸ் மையத்தின் விஞ்ஞானி மற்றும் இயக்குநர் டாக்டர்.ஜெயராம் கெளரி சங்கர் இந்த விருதினைப் பெற்றார். இவர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலையில் பிஎச்.டி பட்டம் பெற்றவர்.

கலை மற்றும் கலாச்சாரத்திற்கான பழைய மாணவர் விருது

- பாடகர், இசைக் கலைஞர் மற்றும் நடிகர் என்று பல தகுதிகளை வைத்திருக்கும் ராகவ் சச்சார் இந்த விருதினைப் பெற்றார். இவர் ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலையில் இசை மற்றும் இசைத்தொகுப்பு படிப்பை மேற்கொண்டவர்.

சிறந்த பழைய மாணவருக்கான முதல்தர ஆஸ்திரேலிய விருது

- டெல்லியிலுள்ள ஸ்பிரிங்டேல்ஸ் பள்ளியின் முதல்வராக இருக்கும் அமிதா வட்டலுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

விளையாட்டிற்கான பழைய மாணவர் விருது

- ஸ்போர்ட்ஸ் எஜுகேஷன் டெவலப்மென்ட் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தின் ஆபரேஷன் மேனேஜராக இருக்கும் சாங்கெட் ஷெட்டி இந்த விருதினைப் பெற்றார். இவர் ஆஸ்திரேலியாவின் எடித் கோவன் பல்கலையில் எம்.பி.ஏ. படித்தவர்.

சமூக சேவைக்கான பழைய மாணவர் விருது

- ஐக்கிய நாடுகள் சபையின் வாழ்க்கைத் தொழில்கள், உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றுக்கான தேசிய ஆலோசகராக இருக்கும் கார்த்திகேயன் வைத்தீஸ்வரன் இந்த விருதினைப் பெற்றார். இவர் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலையில் எம்.பி.ஏ. படித்தவர்.

மேன்மைவாய்ந்த பழைய மாணவர் சேவை விருது

- குளோபல் ரீச் என்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருக்கும் ரவி லோச்சன் சிங் என்பவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இவர் ஆஸ்திரேலியாவின் பாண்ட் பல்கலையில் எம்.பி.ஏ. படித்தவர்.

இந்த விருதுகள் அனைத்தும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப பல்கலை, சிட்னி பல்கலை, மோனாஷ் பல்கலை, பெர்த் எஜுகேஷன் சிட்டி, மேக்குவரி

(Macquarie) பல்கலை, டெகின் பல்கலை, மேற்கு சிட்னி பல்கலை, நியூசெளத் வேல்ஸ் பல்கலை, கர்டின் பல்கலை மற்றும் ஆஸ்திரேலியன் எஜுகேஷன் இன்டர்நேஷனல் போன்ற கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில் வழங்கப்பட்டவை.

ஆஸ்திரேலியக் கல்வி

உலகளவில் பெயர்பெற்ற பல்கலைகள், கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் இருப்பதால், உலகம் முழுவதும் 190 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 5,40,000 மாணவர்கள் வரை இந்நாட்டில் படிக்கின்றனர் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. உயர் கல்வித்தரம், சிறந்த உள்கட்டமைப்பு வசதி, போட்டி, சவால் மற்றும் பலவித கலாச்சாரங்களின் இணைப்பு சூழல் போன்றவை அங்கு கிடைக்கிறது.

அறிவியல், தொழில்நுட்பம், வர்த்தகம், விளையாட்டு மற்றும் படைப்பாக்கத் தொழில் ஆகியவற்றின் மூலமாக உலகிற்கு இந்நாடு அதிக பங்களிப்பை அளிக்கிறது என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீப காலங்களில் கூகுள் மேப், பெனிசிலின், கருப்பைப் புற்றுநோய்க்கான தடுப்பு மருந்து போன்ற பலவித கண்டுபிடிப்புகளில் ஆஸ்திரேலிய நாட்டவர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.

கடந்த 2010ம் ஆண்டிற்கான உலக தரவரிசைப் பட்டியலின்படி, 8% ஆஸ்திரேலியப் பல்கலைகள், உலகின் சிறந்த 100 பல்கலைகள் பட்டியலுக்குள்ளும், 43% பல்கலைகள், உலகின் 500 சிறந்த பல்கலைகள் பட்டியலுக்குள்ளும் இடம்பெற்றன.

ஆஸ்திரேலியாவில் கல்வி கற்கும் வழிமுறைகள் பற்றி விரிவான விவரங்களைத் தெரிந்துகொள்ள

newdelhi@studyinaustralia.gov.au என்ற ஈ-மெயில் முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us