தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொதுப்பிரிவு பொறியியல் கலந்தாய்வின் இறுதி விபரங்கள்

பொதுப்பிரிவு பொறியியல் கலந்தாய்வின் இறுதி விபரங்கள்

பொதுப்பிரிவு பொறியியல் கலந்தாய்வின் இறுதி விபரங்கள்


UPDATED : ஆக 12, 2011 12:00 AM

ADDED : ஆக 12, 2011 12:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2011 12:00 AM ADDED : ஆக 12, 2011 12:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்விற்கு சுமார் 1,40,517 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். இதில் சுமார் 10,4,153 மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்று பாடப்பிரிவுகளை தேர்வு செய்து அதற்கான ஆணைகளைப் பெற்றுக் கொண்டனர்.

36,030 மாணவர்கள் கலந்தாய்விற்கு வரவில்லை. சுமார் 329 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றும், பாடப்பிரிவுகள் எதையும் தேர்வு செய்யாமல் சென்றுவிட்டனர்.

ஜுன் மாத இறுதியிலேயே ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு துவங்கிய பொறியியல் கலந்தாய்வு, அதன்பிறகு, தொழிற்பிரிவு மாணவர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் நடைபெற்றது.

கடந்த ஜுலை 8ம் தேதியன்று பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு துவங்கியது. 8ம் தேதியில் இருந்து ஒரு நாளும் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து 35 நாட்கள் கலந்தாய்வு நடைபெற்றுள்ளது.

கலந்தாய்வின் இறுதியில் சுமார் 45 ஆயிரம் பொறியியல் சேர்க்கை இடங்கள் காலியாக உள்ளன.

இதனைத் தொடர்ந்து, துணைக் கலந்தாய்வும், தொழிற்பிரிவு மாணவர்களுக்கான இறுதிகட்ட கலந்தாய்வும் நடைபெற உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us