UPDATED : ஆக 13, 2011 12:00 AM
ADDED : ஆக 13, 2011 11:04 AM
சமச்சீர் கல்வி புத்தகத்தை அமல்படுத்தும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளைத் தவிர மற்றப் பள்ளிகள் அனைத்தும், தமிழ்நாடு பாட நூல் கழகத்தின் 22 மாவட்ட வட்டார அலுவலகங்களில் புத்தகங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கான சமச்சீர் புத்தக விலைகள்
1- 2 வகுப்புகளுக்கான புத்தக செட் ரூ. 200.
3- 6ம் வகுப்புகளுக்கான புத்தக செட் ரூ.250.
7-8 வகுப்புகளுக்கான புத்தக செட் ரூ.300
9-10 வகுப்புகளுக்கான புத்தக செட் ரூ.350
மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் தங்கள் பள்ளிகளுக்குத் தேவையான புத்தகங்களை மொத்தமாக பெற்றுக் கொள்ளும் போது 5 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. பள்ளிகள் புத்தகத்திற்கான தொகையை வங்கி வரைவேலை மூலம் செலுத்தி புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.
தனியாக ஒரு புத்தகம் வாங்க
1-5 வகுப்பு வரை ஒரு பிரதி ரூ.60
6-8 வகுப்ப வரை ஒரு பிரதி ரூ.65
9-10ம் வகுப்பு வரை ஒரு பிரதி ரூ.75.
சென்னையில் கல்லூரி சாலையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் விற்பனை மையத்தில் தனிப்பிரதிகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
