தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பாலிடெக்னிக்கில் இலவச தொழில் பயிற்சி

அரசு பாலிடெக்னிக்கில் இலவச தொழில் பயிற்சி

அரசு பாலிடெக்னிக்கில் இலவச தொழில் பயிற்சி


UPDATED : ஆக 13, 2011 12:00 AM

ADDED : ஆக 13, 2011 05:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 13, 2011 12:00 AM ADDED : ஆக 13, 2011 05:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எஸ்.பத்மினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை அவினாசி ரோடு கொடிசியா வளாகத்துக்கு எதிரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் கல்வியை தொடர முடியாத ஏழை, எளியோர் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்போரின் மேம்பாட்டுக்காக இலவச தொழில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இதில் பெண்களுக்கு 6 மாத கால தையல் மற்றும் எம்ப்ராய்டரி பயிற்சியும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 3 மாத கால கம்ப்ïட்டர் பயிற்சியும் வழங்கப்படும்.

இதே போல் ஆண் மற்றும் பெண்களுக்கு ஒரு மாத பயிற்சியாக உணவு பாதுகாத்தல் மற்றும் பதப்படுத்துதல், பேக்கரி பொருள் தயாரிப்பு, 2 வாரகால பயிற்சியாக காகிதப்பை தயாரித்தல் ஆகியவை வழங்கப்படும். அரசூர், இருகூர், காளப்பட்டி, பட்டணம், கலங்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் விரிவாக்க மையங்களில் பெண்களுக்கு 6 மாத பயிற்சியாக தையல், எம்ப்ராய்டரி பயிற்சி ஆகியவை வழங்கப்படுகிறது. பயிற்சி பெற்றவர்களுக்கு முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

இதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் முதல்வர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் அல்லது திட்ட அலுவலர், அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அவினாசி ரோடு, சிவில் விமானநிலைய அஞ்சல், கோவை-14 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது 0422-2913220 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us