UPDATED : ஆக 23, 2011 12:00 AM
ADDED : ஆக 23, 2011 10:00 AM
ஆனால், அத்தகையதொரு கல்விமுறை சமூகத்தால், நீண்டகாலம் விரும்பப்பட்ட ஒன்றாக இருந்தது மற்றும் குறைந்த செலவு உடையதாகவும், நேரடியாக சென்று படிக்க முடியாதவர்களுக்கு ஒரு சிறந்த மாற்றாகவும் இருந்தது. இத்தகையதொரு கல்விமுறை பெரும் வரவேற்பை பெற்றது. பின்னர், அந்தக் கல்விமுறை வளர்ச்சியடைந்து, அதன்கீழ் பலவிதமான பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டன. இன்றைய நிலையில் தொலைநிலைக் கல்வி முறையானது, அறிவு-அடிப்படை கல்வி என்ற நிலையிலிருந்து, திறன் அடிப்படை கல்வி என்ற நிலை வரையில் முன்னேற்றம் கண்டுள்ளது. பாட உபகரணங்கள்
அச்சிடப்பட்ட பாடமுறையானது, எந்தவித தொலைநிலைக் கல்விமுறைக்கும் முதுகெலும்புப் போன்றது, ஏனெனில், இதன் தரம் உயர்வானதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால்.
படித்தல் உபகரணமானது, ஒரு மாணவர், ஆசிரியர் துணையின்றி தனியாகவே அமர்ந்து படிப்பதற்கு துணைபுரிவதாக இருக்க வேண்டும். எனவேதான் மாணவர்கள், அச்சிடப்பட்ட பாடத்திட்ட உபகரணமானது, எளிமையான மற்றும் விளக்கமான மொழியில் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால், பாடப்புத்தக வடிவில் இருக்கும் உபகரணங்கள் உதவியாக இல்லை என்று மாணவர்கள் கூறுகிறார்கள்.
பாடங்களானது, உதாரணங்கள், விளக்கக் குறிப்புகள், படங்கள் மற்றும் எண்கள் ஆகியவற்றுடன் இருக்க வேண்டும். மேலும், அச்சிட்ட உபகரணங்கள் பலவற்றில் அச்சுப் பிழைகள் இருக்கின்றன. இது சில சமயங்களில் மிகவும் அதிகமாக இருக்கின்றன. எனவே மேற்கூறிய குறைகள் நீக்கப்பட்டு, மேற்குறிப்பிட்ட அம்சங்களுடன் பாட உபகரணங்கள் இருந்தால், மாணவர்களுக்கு சிறப்பான பயனைத் தரலாம்.
சரியான நேரத்தில் உபகரணங்கள் வழங்கல்
தொலைநிலைக் கல்வியில் சேரும் மாணவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் அனைத்தும் சரியான நேரத்தில், சரியானபடி கிடைப்பது மிகவும் முக்கியம். பாட உபகரணங்கள் தேவையான நேரத்தில் கிடைக்காமல் போனால், அது மாணவரின் தேர்வை அதிகமாக பாதிக்கும். இணையதளத்திலிருந்து இறக்குமதி செய்துகொள்ளும் வசதியிருந்தாலும், அந்த உள்ளடக்கங்கள் எல்லா நேரங்களிலும் கிடைப்பதாக இருக்க வேண்டும். ஏனெனில், சில சமயங்களில் அவை கிடைப்பதில்லை என்ற புகாரும், மாணவர்களிடமிருந்து வருகிறது.
பாட உபகரணங்களை தவணை முறையில் வழங்குவதாக இருந்தாலும், கடைசி தவணையானது, குறைந்தபட்சம், தேர்வுக்கு 3 மாதங்கள் முன்பாக வழங்கப்பட வேண்டும். இந்த உபகரணங்கள் வழங்கும் விஷயத்தில் இக்னோ(IGNOU) போன்ற பெரிய கல்வி நிறுவனங்களே தவறு செய்கின்றன. பல தனியார் தொலைநிலைக் கல்வி நிறுவனங்கள், ஒரு மாணவர் சேர்க்கையை பதிவுசெய்து, பணம் கட்டியவுடன் பாட உபகரணங்களை வழங்கி விடுகின்றன.
ஆன்லைன் உதவி
நேரடிக் கல்விமுறையைப் போலவே, தொலைநிலைக் கல்வி முறையும் நடைமுறையில் பலவிதமான சிக்கல்களை எதிர்கொள்கிறது. மாணவர்களின் தனிமையுணர்வை போக்குவது இவற்றில் முக்கியமானது. ஆன்லைன் மூலமாக கல்வி கற்பது பயனுடையதாக இருந்தாலும், இதிலும் முழுமையான பயன்கள் இல்லை என்ற புகார்கள் இருக்கின்றன. ஆனாலும் சில கல்வி நிறுவனங்கள், இம்முறையில் சாதித்துள்ளன.
ஆன்லைன் கற்பித்தல் முறையில் பல கல்வி நிறுவனங்கள் குறைபாடுகளைக் கொண்டுள்ளதால், குறைந்தளவு மாணவர்களே இச்சேவையில் திருப்தி தெரிவிக்கின்றனர். ஆனாலும், சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகம் மற்றும் சிம்பயோசிஸ் போன்றவை இம்முறையில் வெற்றிகரமாக செயல்படுகின்றன.
பணி ஒதுக்கீட்டு(அசைன்மென்ட்) அமைப்பு
மாணவர்களுக்கு இதுபோன்ற பணிகளை வழங்குவதன் மூலம், அவர்கள் தங்கள் முழுப் பாடங்களையும் குறைந்தபட்சம் ஒரு தடவையாவது படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த முறையானது, இறுதித் தேர்வில் மதிப்பெண்களை அதிகமாகப் பெற உதவுகிறது. அசைன்மென்ட்களை சமர்ப்பிப்பதை ஒரு எளிதான விஷயமாக மாணவர்கள் நினைக்கின்றனர்.
தனிப்பட்ட தொடர்பு அமைப்பு(Personal contact system - PCP)
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நேரடி உரையாடலை இந்த முறையானது வழங்குகிறது. இந்த வசதியை வழங்க, ஸ்டடி சென்டர்களை, தொலைநிலைக் கல்வியை வழங்குபவர்கள் வைத்துள்ளனர். இந்த முறையில், மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை தீர்க்க வரும்போது அங்கே ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.
தனிப்பட்ட தொடர்பு அமைப்பு(PCP) என்ன செய்கிறது?
இந்த முறையில், வழக்கமான கற்பித்தல் பணி நடைபெறுகிறது மற்றும் கற்றலில் மாணவர்களுக்கு இருக்கும் சிரமங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. மேலும், இதன் மூலம், ஸ்டடி சென்டரில் இருக்கும் நூலகம் மற்றும் கணினிகளை பயன்படுத்தும் வாய்ப்புகளும் மாணவர்களுக்கு கிடைக்கின்றன. ஒரு சென்டரில் மாணவர்கள் சரியான முறையில் வரவில்லையென்றால், அங்கே நிலைமை சரியில்லை என்று அர்த்தம். தனிப்பட்ட தொடர்பு அமைப்பு(PCP) என்பது தொலைநிலைக் கற்றல் முறையில் இருக்கும் ஒரு அம்சம் மட்டுமே என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தொலைநிலைக் கல்வியின் வழிகாட்டு நெறிமுறைகள்
இத்துறை நிபுணர்கள் மற்றும் கமிட்டிகளிடம் இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அவை, இக்கல்விமுறையின் தரத்தை மதிப்பாய்வு செய்வதற்கான ஒரு அளவுகோலாகப் பயன்படுகின்றன. ஆனால், அத்தகைய வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனில், தொலைநிலைக் கல்விமுறை என்பது, வழக்கமான கல்விமுறையின் ஒரு பலவீனமான மாற்றாகவே இருக்கும் என்பது நிபுணர்கள் கருத்து.
ஸ்டடி சென்டர் உதவி அமைப்பு
வழக்கமாக, இந்த நிலையங்களில் நூலகங்கள் இருக்க வேண்டும். அந்த நூலகத்தில், படிப்பிற்கு தேவைப்படும் அனைத்து உபகரணங்களும் இருக்க வேண்டும். மேலும், AV மற்றும் கணினி போன்ற உபகரணங்களும் இருக்க வேண்டும். ஆனால், வெகுசில ஸ்டடி சென்டர்களைத் தவிர, பல நிலையங்கள் இதுபோன்ற அனைத்து வசதிகளையும் கொண்டிருப்பதில்லை. E - Learning எனப்படும் கற்றல் முறையானது, தொலைநிலைக் கல்வி பயிலும் பல மாணவர்களால் விரும்பப்படும் ஒன்றாக இருக்கிறது.
