தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வங்கி பணிகளுக்கு பொது போட்டித் தேர்வு

வங்கி பணிகளுக்கு பொது போட்டித் தேர்வு

வங்கி பணிகளுக்கு பொது போட்டித் தேர்வு


UPDATED : ஆக 26, 2011 12:00 AM

ADDED : ஆக 26, 2011 12:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 26, 2011 12:00 AM ADDED : ஆக 26, 2011 12:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்த 2000ம் ஆண்டு வரை, பொதுத் துறை வங்கிகளின், அதிகாரிகள், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, பி.எஸ்.ஆர்.பி., மூலம், ஆண்டிற்கு இரு முறை பொது போட்டித் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. அதன் பின், தங்கள் பணியிடத் தேவையைப் பொருத்து, வங்கிகள் தனித்தனியாக போட்டித் தேர்வுகளை நடத்தி வந்தன.

இத்தேர்வில் பங்கேற்கும் போட்டியாளர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. மேலும், போட்டியாளர்கள் மாதந்தோறும் ஏதாவதொரு வங்கித் தேர்வில் பங்கேற்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகினர். இம்முறையை மாற்றி, பொதுத் துறை வங்கிகளின் காலிப் பணியிடங்களை நிரப்ப, மீண்டும் பொது போட்டித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை, பெற்றோர் மற்றும் போட்டியாளர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக நிலவியது.

தற்போது, எஸ்.பி.ஐ., வங்கியைத் தவிர, இந்தியன் வங்கி, கனரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, பாங்க் ஆப் பரோடா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 19 பொதுத் துறை வங்கிகள் ஒருங்கிணைந்து, இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பர்சனல் செலக்ஷன் (ஐ.பி.பி.எஸ்.,) எனும் அமைப்பின் மூலம், வங்கிப் பணியாளர்களுக்கான பொதுத் தேர்வை நடத்த முடிவு செய்துள்ளன.

இதன் முதல் படியாக, அடுத்த மாதம் 18ம் தேதி, 20 ஆயிரம் வங்கி அதிகாரிகள் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வும், வரும் நவம்பர் 20ம் தேதி, 30 ஆயிரம் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வும் நடைபெற உள்ளது.

வங்கி அதிகாரி (Probationary Officer) பதவிக்கான எழுத்துத் தேர்வுக்கு, குறைந்தபட்சம் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஓ.சி. - 30, ஓ.பி.சி. - 33 மற்றும் எஸ்.சி. - 35 வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இளநிலை உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு, குறைந்தபட்சம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓ.சி. - 28, ஓ.பி.சி. - 31 மற்றும் எஸ்.சி.- 33 என, வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us