UPDATED : செப் 06, 2011 12:00 AM
ADDED : செப் 06, 2011 10:18 AM
பிழைப்புக்காக ஆசிரியர் பணிக்கு வரக் கூடாது. சேவை மனப்பான்மையோடு, ஈடுபாட்டுடன் ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன் கூறினார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் சார்பில், சென்னையில் நேற்று ஆசிரியர் தின விழா நடந்தது. இதில், நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசியதாவது:
அப்போது, சேவையின் தரம் உயர்வாக இருந்தது. ஆனால், இப்போது சம்பளம் உயர்ந்த அளவுக்கு, சேவையின் தரம் உயர்ந்ததாக தெரியவில்லை.முன்னாள் ஜனாதிபதியும், ஆசிரியருமான ராதாகிருஷ்ணனை, பல உயர் பதவிகள் தேடி வந்தபோதும், அவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டு, உன்னதமான ஆசிரியர் பணியை தேர்ந்தெடுத்ததற்கு சேவை மனப்பான்மை தான் காரணம். ஆசிரியர் பணி, பிழைப்புக்கான பணி அல்ல, சேவைக்கான பணி. இவ்வாறு வெ. ராமசுப்பிரமணியன் கூறினார்.
விழாவில், சிறந்த ஆசிரியர்கள் 64 பேருக்கு, விருது வழங்கப்பட்டது.
