தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காப்பகங்களில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு கல்வி நிதியுதவி

காப்பகங்களில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு கல்வி நிதியுதவி

காப்பகங்களில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு கல்வி நிதியுதவி


UPDATED : செப் 07, 2011 12:00 AM

ADDED : செப் 07, 2011 05:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2011 12:00 AM ADDED : செப் 07, 2011 05:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேவை இல்லங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களில் தங்கிப் படிக்கும் 100 மாணவிகளுக்கு உயர் கல்வி பயில நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிவிப்பில், சமூக நலத்துறையின் 7 சேவை இல்லங்கள், 27 அரசு குழந்தைகள் காப்பகங்களில் தங்கிப் படிக்கும் மாணவியரில் பலர் 12ம் வகுப்பிற்கு பின் உயர் கல்வியை தொடர முடியாத நிலை உள்ளது.

அவர்களின் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு உயர்கல்வி பயில நிதியுதவி வழங்கப்படும். ஒரு ஆண்டுக்கு பட்டப்படிப்புக்கு ரூ.30 ஆயிரத்துக்கு மிகாமலும், தொழிற்படிப்புகளாயின் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமலும் நிதியுதவி வழங்கப்படும்.

அதேப்போல் ஆசிரியர் மற்றும் செவிலியர் பயிற்சி பெற விரும்பும் 100 மாணவிகளுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.

சேவை இல்ல மாணவிகள் கல்விச் சுற்றுலா செல்ல ரூ.3 லட்சம் செலவிடப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us