UPDATED : செப் 08, 2011 12:00 AM
ADDED : செப் 08, 2011 06:03 PM
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மூலம் படித்து வரும் எம்.ஏ., எம்.காம். எம்.எஸ்.சி. ஆகிய முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு நடந்த தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி மாலை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை http://kalvimalar.dinamalar.com/results.asp இணையதளத்திலும் காணலாம். சென்னை பல்கலைக்கழகத்தின்
கடந்த ஜுன் மாதம் துவங்கி ஜுலை மாதம் வரை சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வியில் பயிலும் முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன.
தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
மதிப்பெண் சான்றிதழ்கள் விரைவு அல்லது பதிவு தபாலில் மாணவர்களின் முகவரிக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும். தங்கள் பதிவெண் ஏ9, ஏ10 மற்றும் சி10 என துவங்கும் மாணவர்கள் மட்டும் விடைத்தாள் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
ஒரு விடைத்தாளுக்கு 750 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். மறு மதிப்பீட்டு விண்ணப்பத்தை சென்னை பல்கலை www.ideunom.ac.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று சென்னை பல்கலை பதிவாளர் தெரிவித்துள்ளார்.
