தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாகப்பட்டினத்தில் மீன்வளப் பல்கலைக்கழகம்: முதல்வர் ஜெயல‌லிதா

நாகப்பட்டினத்தில் மீன்வளப் பல்கலைக்கழகம்: முதல்வர் ஜெயல‌லிதா

நாகப்பட்டினத்தில் மீன்வளப் பல்கலைக்கழகம்: முதல்வர் ஜெயல‌லிதா


UPDATED : செப் 13, 2011 12:00 AM

ADDED : செப் 13, 2011 02:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 13, 2011 12:00 AM ADDED : செப் 13, 2011 02:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுதொடர்பாக அவர் சட்டப்பேரவையில் கூறியதாவது,

'தமிழகமானது, 1,076 கி.மீ. நீளமுள்ள கடற்கரையினைக் கொண்டுள்ளது. 591 கடல் மீனவ கிராமங்களில், சுமார் 9 லட்சம் மீனவ மக்கள் உள்ளனர். 6,200 மீன்பிடி விசைப்படகுகளும், 50,000 பாரம்பரிய கலன்களும் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் கடல்மீன் உற்பத்தி 4 லட்சம் டன் ஆகும். தமிழகத்திலிருந்து 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கடல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

எனவே, மீன்வளத்தை மேம்படுத்தவும், மீன்வளத்தை பெருக்குவதில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, அதன்மூலம் மீனவர்களின் வருவாய் மேம்பாடு அடையச் செய்வதற்கும், மீன்வளக் கல்வியை மேலும் ஊக்குவிப்பது அவசியமாகிறது. மீன்வள மேம்பாட்டில் முன்னோடியாக உள்ள நாடுகளில், மீன்வளக் கல்விக்கென பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவில், கேரள மாநிலத்தில், கடந்த ஏப்ரல் மாதம் மீன்வளம் மற்றும் பெருங்கடல் அறிவியல் பல்கலைக்கழகம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், மீன்வளத்திற்கென 'மீன்வளப் பல்கலைக்கழகம்' ஒன்றை நிறுவ முடிவுசெய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில், 188 கி.மீ. நீளமுள்ள கடற்கரை உள்ளது. மீன்பிடித்தல், உலர் மீன் உற்பத்தி மற்றும் இறால் வளர்ப்பு ஆகியவை இம்மாவட்டத்தின் முக்கியப் பொருளாதார நடவடிக்கைகள். இம்மாவட்டத்தில் மட்டும், 9,000 மீன்பிடிக் கலன்கள் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளன. எனவே, மீன்வளப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு, நாகப்பட்டினமே சிறந்த இடமாக திகழ்கிறது.

நாகப்பட்டினம் தாலுகாவில், பனங்குடி மற்றும் நாகூர் கிராமங்களில், 85 ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் 30 கோடி மதிப்பீட்டில், இந்த மீன்வளப் பல்கலை அமைக்கப்படும்.

இப்பல்கலையுடன்,

* தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
* மீன்வளத் துறையின் ஆராய்ச்சிப் பிரிவு
* சென்னை மீன்வளத் தொழில்நுட்ப பயிற்சி நிலையம்
* சென்னை மீன்வளப் பணியாளர் பயிற்சி நிலையம்
* தமிழ்நாடு கடல்சார் கழகம்

ஆகியவை முதற்கட்டமாக இணைக்கப்படும்.

மேலும், இப்பல்கலையில்,

* இறால் வளர்ப்பு
* கெண்டை மீன் வளர்ப்பு
* வண்ண மீன் வளர்ப்பு
* மீன் பதப்படுத்தல் மற்றும் மீன் மதிப்புக் கூட்டிய பொருட்கள் உற்பத்தி
* மீன்பிடிப் படகு மற்றும் இயந்திரப் பராமரிப்பு
* கடலாள் பயிற்சி மற்றும் நீர்வழிப் பயிற்சி

போன்ற பாடப்பிரிவுகளில் பட்டங்கள் மற்றும் டிப்ளமோக்கள் வழங்கப்படும்.

தொழில்நுட்ப பரிமாற்றம், விரிவாக்க கல்வி, மனிதவளப் பயிற்சி மற்றும் மீன்வளப் பயன்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதில் இப்பல்கலை பெரும்பங்கு வகிக்கும். மேலும், இந்தப் பல்கலையில் பல்வேறு பிரிவுகளில் பயிற்சிபெறும் நபர்கள், உள்நாடு மற்றும் உலகளவில் வேலை வாய்ப்பைப் பெறவும் இது வழிவகுக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்'.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us