UPDATED : செப் 15, 2011 12:00 AM
ADDED : செப் 15, 2011 10:57 AM
பேரவையில் தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலை வாய்ப்புப் பயிற்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசுகையில், வேலை வாய்ப்பு அலுவலகங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் பல வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
கணினி ஒருங்கிணைப்பின் அடுத்தகட்டமாக வேலையளிப்போர் ஆன்-லைன் மூலம் தங்களுக்கு தேவைப்படும் பெயர் பட்டியலைப் பெற்றுக் கொள்ளலாம்.
தனியார் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பத் தேவைப்படும் பதிவுதாரர்கள் குறித்த விவரத்தை ஆன்-லைன் மூலம் பெற்றிடும் வகையில் இந்த சேவை விரிவுபடுத்தப்படும்.
இதற்காக ஒட்டுமொத்த விவரங்கள் அடங்கிய பிரத்யேக இணையதளம் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயனடைவார்கள். தனியார் நிறுவனங்களும் எளிதாக தங்கள் நிறுவனத்தில் உள்ள காலியிடங்களை நிரப்ப முடியும்.
இந்த பணி தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்தின் மூலம் செய்யப்பட உள்ளது.
இதேப்போல, மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் ஒரு தனியார் துறை பணி நியமன உதவிப் பிரிவு தனியாக துவக்கப்படும். அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 37 பிரிவுகள் துவக்கப்படும்.
இதன் மூலம் வேலை தேடும் இளைஞர்களுக்கும், வேலை கொடுக்கும் நிறுவனத்திற்கும் ஒரு பாலம் ஏற்படுத்தப்படும் என்றார்.
