தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியல் வெளியீடு

ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியல் வெளியீடு

ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியல் வெளியீடு


UPDATED : செப் 19, 2011 12:00 AM

ADDED : செப் 19, 2011 12:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 19, 2011 12:00 AM ADDED : செப் 19, 2011 12:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் வெளியான வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் 3655 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 76 பேருக்கு பதிவு மூப்பு விடுபட்டுப்போய் இருந்தது. இவர்கள் உயர் நீதிமன்றம் மூலமாக நடவடிக்கை மேற்கொண்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.

இப்பணியைத் தொடர்ந்து திருத்தப்பட்ட முதலாவது தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 7ம் தேதி வெளியிட்டது. தமிழ், இயற்பியல், விலங்கியல், தாவரவியல், புவியியல், வரலாறு என 6 பாடப்பிரிவுகளுக்கு 1,513 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆங்கிலம், கணிதம், வேதியியல் பாடங்களுக்கான ஆசிரியர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்ந்து எடுக்கப்பட்ட 2445 பேர்களில் பள்ளி கல்வித் துறைக்கு 1524 பேரும், தொடக்க கல்வித் துறைக்கு 921 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். பட்டியலில் பெயர் இடம்பெற்றவர்களுக்கு தபால் மூலமாக தெரிவிக்கப்படும். உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு உரிய துறை வாயிலாக பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us