தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/படிக்கும் ஆர்வத்தை தூண்டுபவர்களே திறமையான ஆசிரியர்கள்

படிக்கும் ஆர்வத்தை தூண்டுபவர்களே திறமையான ஆசிரியர்கள்

படிக்கும் ஆர்வத்தை தூண்டுபவர்களே திறமையான ஆசிரியர்கள்


UPDATED : செப் 21, 2011 12:00 AM

ADDED : செப் 21, 2011 11:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2011 12:00 AM ADDED : செப் 21, 2011 11:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: "பள்ளிகளில் படிக்கும் ஆர்வத்தை தூண்டுபவர்கள் தான் திறமையான ஆசிரியர்கள்" என வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., சைலேந்திர பாபு பேசினார்.

கரூர் மாவட்ட பொதுநூலகத்துறை மற்றும் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில், மாணவ, மாணவியருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நாரத கானா சபாவில் நடந்தது.

நிகழ்ச்சியில் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., சைலேந்திரபாபு பேசியதாவது: குழந்தைகளை நம்பித்தான் குடும்பம் உள்ளது. புத்திர சோகம் என்பது மறக்க முடியாது. எனது போலீஸ் வேலையில் விபத்து உள்ளிட்ட பல்வேறு தருணங்களில் குழந்தைகளை இழந்த பெற்றோரின் கதறல்களை கேட்டுள்ளேன். எனவே, ரோட்டில் செல்லும் போது விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

சமூகத்தில் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும். ஒழுக்கம் என்பது எல்லா விஷயத்திலும் இருக்க வேண்டும். ஜீவநதிகளை அசுத்தம் செய்யும் பழக்கம் நம்நாட்டில் தான் உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, பல்வேறு நோய்கள் வர காரணமாகிறது. நதிகளை அசுத்தப்படுத்தாமல் இருப்பதும் ஒருவகை ஒழுக்கம்தான்.

மாணவ, மாணவியருக்கு உடல் நலம் முக்கியம். உடல் நலமுடன் இருந்தால்தான் உழைக்க முடியும். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் குடியுங்கள். உடம்பு பல்வேறு வேதியில் பொருட்களால் உருவானது. அவை நன்கு செயல்பட தண்ணீர் முக்கியம்.

கல்வியில் சாதித்தால்தான் உங்கள் பெற்றோருக்கு பெருமை. வகுப்பறையில் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் ஆசிரியர்கள் திறமையானவர்கள். தேர்வுக்கு திட்டமிட்டு படிக்க வேண்டும். டாக்டர், இன்ஜினியர் படிப்புதான் உயர்ந்தது என நினைக்க வேண்டாம். விவசாய பட்டப்படிப்பு படித்து விட்டு, ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றால் அந்த துறைக்கே முதன்மையாக வர முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us