UPDATED : செப் 21, 2011 12:00 AM
ADDED : செப் 21, 2011 05:35 PM
சுற்றுலாத்துறை வேகமாக வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில், தரமான உணவு விடுதிகளுக்கான தேவையும் அதிகரித்திருக்கிறது. உணவு விடுதிகளில் சிற்றுண்டி, உணவு, பானங்கள் வழங்குவது தொடர்பான ஓராண்டு டிப்ளமா படிப்பை மகரிஷி தயானந் பல்கலைக்கழகம் வழங்குகிறது.
இப்படிப்பில் சேர பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உணவு, பானங்கள் பரிமாறுதல், அதற்கான உபகரணங்கள், முறைகள் போன்றவற்றில் களப்பயிற்சி வழங்கப்படுகிறது.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மெரிட் முறையில் தேர்வு செய்யப்படுகிறது. மேலும், குரூப் டிஸ்கஷன், நேர்முகத்தேர்வு போன்றவையும் கணக்கில் கொள்ளப்படுகிறது. கல்விக் கட்டணமாக 21 ஆயிரத்து 900 ரூபாய் செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு http://mdudde.net/ என்ற தளத்தைப் பார்வையிடலாம்.
