UPDATED : செப் 27, 2011 12:00 AM
ADDED : செப் 27, 2011 12:25 PM
அ நிறம் | அளவு
அதேப்போல, சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் மொத்தமுள்ள 85 பி.டி.எஸ். இடங்களில் 84 இடங்கள் நிரம்பிவிட்டன. ஒரு இடத்தை நிரப்ப செவ்வாயன்று கலந்தாய்வு நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள
17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,653 எம்.பி.பி.எஸ். இடங்களும், 11 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 838 அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைக்கும் எம்.பி.பி.எஸ். இடங்களும் கலந்தாய்வு மூலம் மாணவ சேர்க்கை நடைபெறும்.அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் எம்
.பி.பி.எஸ். இடங்களில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு அளிக்கப்படும். அவற்றில் 30 இடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறாமல் தமிழக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.திரும்ப ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கும்
, மாணவர்கள் சேராமல் காலியான மருத்துவ இடங்களுக்கும் இறுதிகட்ட மருத்துவக் கலந்தாய்வு மூலம் மாணவ சேர்க்கையை தமிழக மருத்துவ கல்விக் தேர்வுக் குழு நடத்தியது.கடந்த
24ம் தேதி முதல் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ். இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள ஒரே ஒரு பி.டி.எஸ். இடத்திற்கான கலந்தாய்வு இன்று நடைபெறும். இன்றுடன் மருத்துவக் கலந்தாய்வு நிறைவு பெறுகிறது.மருத்துவக் கலந்தாய்வு குறித்து உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில்
, இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின்படி செப்டம்பர் 30ம் தேதிக்குள் சேர்க்கையை முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.அதன் அடிப்படையில் கடந்த
3 நாட்களாக நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கை பெற்ற மாணவர்கள் அந்தந்த கல்லூரியில் செப்டம்பர் 30ம் தேதி மாலை 4 மணிக்குள் சேர்ந்துவிட காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குப செயலர் மருத்துவர் ஷீலா கிரேஷ் ஜீவமணி தெரிவித்துள்ளார்.