UPDATED : ஏப் 17, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பொறியியல் கல்லூரிகளில் படித்த ஏராளமான மாணவர்கள் ஐ.டி. நிறுவனங்களில் சேருவதில் ஆர்வம் காட்டி வந்த போதிலும்கூட, சென்னை ஐஐடி மாணவர்களிடம் அந்த ஆர்வம் குறைந்து வருகிறது. இந்த ஆண்டில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவர்கள் எந்த விதமான பணிகளைச் சேர்ந்துள்ளனர் என்ற விவரங்களிலிருந்து இது குறித்துத் தெரிய வந்துள்ளது.
சென்னை ஐஐடியில் இந்த ஆண்டில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் 1098 மாணவர்களுக்கு பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளது. இதில் 25 சதவீத மாணவர்களே ஐ.டி. நிறுவனங்களில் பணியில் சேருவதற்கு முன்வந்துள்ளனர். நிதி மற்றும் ஆலோசனை நிறுவனங்களில் சேர்ந்தவர்கள் மட்டும் 17 சதவீதம். அதேசமயத்தில், 51 சதவீத மாணவர்கள் பொறியியல் தொழில் நிறுவனங்களில் சேர உள்ளனர்.