UPDATED : செப் 29, 2011 12:00 AM
ADDED : செப் 29, 2011 03:45 PM
சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஆயத்த ஆடை வடிவமைப்பு மையத்தில் ஆடை உற்பத்தி தொழில்நுட்பம், ஆயத்த ஆடை மாதிரி வடிவமைப்பு, உற்பத்தி மேற்பார்வையாளர், தரக்கட்டுப்பாட்டாளர், தையல் எந்திரம் பழுதுபார்த்தல், ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம் ஆகிய பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சிகளை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், எஸ்.சி, எஸ்.டி. வகுப்பைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் இலவசமாக பெற தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. பயிற்சிக்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட அரசு துறைகள் ஏற்றுக்கொள்ளும். குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். வயது 35-க்குள்ளும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள்ளும் இருக்க வேண்டும். தகுதி உடையவர்கள் தங்கள் கல்வித்தகுதி சான்றிதழ்கள், சாதிச்சான்று, வருமானச்சான்று (அசல் மற்றும் நகல்) 4 பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள் ஆகியவற்றுடன் நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை கிண்டியில் உள்ள ஆயத்த ஆடை வடிவமைப்பு மையத்திற்கு (திரு.வி.க. தொழிற்பேட்டை எச்.டி.எல். ஆபீஸ் அருகில்) நேரில் வர வேண்டும் என்று பயிற்சி மையத்தின் முதல்வர் டி.சி.பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
