UPDATED : அக் 06, 2011 12:00 AM
ADDED : அக் 06, 2011 11:41 AM
அ நிறம் | அளவு
உயிரி தொழில்நுட்பம், உயிரி வேதியியல், கணிதம் போன்ற துறைகளில் இளநிலை அறிவியல் பட்டம் முடித்தவர்களுக்காக கீமோ-இன்பர்மெடிக்ஸ் முதுநிலை டிப்ளமோ படிப்பை மத்திய பிரதேசத்தின் போஜ் பல்கலை வழங்குகிறது.
வேதியியல் துறையின் அடிப்படை அறிவுடன், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, வேளாண் வேதியியல், மருந்து தயாரிப்பு, உயிரி தொழில்நுட்பத்துறைகளில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் விதத்தில் இப்பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
பாடப்புத்தகங்கள், நூலக உதவி, ஆடியோ, வீடியோ முறையில் பாட விளக்கங்களும் வழங்கப்படுகின்றன. ஓராண்டு படிப்பாக இருந்த போதும், பதிவு செய்ததில் இருந்து மூன்றாண்டுகளுக்குள் நிறைவு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு www.bhojvitualuniversity.com என்ற இணையப் பக்கத்தைப் பார்வையிடலாம்.
