தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியியல் மாணவருக்கு கல்விக்கடன் வழங்க உத்தரவு

பொறியியல் மாணவருக்கு கல்விக்கடன் வழங்க உத்தரவு

பொறியியல் மாணவருக்கு கல்விக்கடன் வழங்க உத்தரவு


UPDATED : அக் 07, 2011 12:00 AM

ADDED : அக் 07, 2011 01:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2011 12:00 AM ADDED : அக் 07, 2011 01:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொறியியல் படிக்கும் ஏழை மாணவனுக்கு கல்விக்கடன் முழுவதையும் அளிக்க வேண்டும் என்று இந்தியன் வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவபிரகாசம் என்ற மாணவர் சென்னையை அடுத்த படூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இஇஇ பாடப்பிரிவில் சேர்க்கை பெற்றார்.

மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த சிவபிரகாசம், முதல் தலைமுறை பட்டதாரியாவார்.

இவர் கல்விக்கட்டணம், விடுதிக் கட்டணம் என மொத்தமாக ஆண்டொன்றுக்கு ரூ.60 ஆயிரமும், 4 ஆண்டுகளுக்கு 2.40 லட்ச ரூபாயும் கட்ட வேண்டிய நிலையில் உள்ளார்.

இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி இந்தியன் வங்கிக் கிளையில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இந்தியன் வங்கி விடுதிக் கட்டணம் ரூ.25 ஆயிரம் என்று கணக்கிட்டு வெறும் 1.50 லட்சத்தை மட்டும் வழங்கியது.

முழுத் தொகையையும் கல்விக் கடனாக வழங்கக் கோரி சிவப்பிரகாசம் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கு விசாரணையின் போது வங்கி நிர்வாகம், ஒவ்வொரு கல்லூரியில் பல்வேறு தொகைகளை விடுதிக் கட்டணமாக வசூலிக்கின்றன. ஆனால் எங்கள் வங்கி சார்பில் ரூ.25 ஆயிரத்தையே விடுதிக் கட்டணமான எல்லா மாணவர்களுக்கும் அளிக்கிறோம். இதில் மாற்றமில்லை என்று கூறினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, விடுதிக் கட்டணமாக ரூ.25 ஆயிரத்தை மட்டுமே அனுமதிப்பதை கொள்ளையாக வைத்திருப்பது குறித்து எந்த ஆதாரத்தையும் வங்கி தாக்கல் செய்யவில்லை.

கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை அதிகமாக வசூலிப்பதை வங்கி நிர்வாகம் கேள்வி கேட்க முடியாது.

அதேப்போல கல்வி நிறுவனங்கள் வசூலிக்கும் எந்தத் தொகையையும் வங்கியிடம் கோரலாம் என்று கடன் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ.4 லட்சம் வரைக்கும் சொத்து உத்திரவாதம் காட்டாமல் கடன் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் ரூ.4 லட்சத்துக்கும் குறைவாகவே கடன் கேட்கிறார். எனவே அவருக்கு மொத்த தொகையான 2.40 லட்ச ரூபாயை வங்கி நிர்வாகம் அளிக்க வேண்டும். ஏற்கனவே ரூ.1.50 லட்சம் தரப்பட்டுள்ளதால், மீதி தொகை அளித்தால் போதுமானதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us