தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பவர் கிரிட் கார்பரேஷனில் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி

பவர் கிரிட் கார்பரேஷனில் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி

பவர் கிரிட் கார்பரேஷனில் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி


UPDATED : அக் 17, 2011 12:00 AM

ADDED : அக் 17, 2011 02:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2011 12:00 AM ADDED : அக் 17, 2011 02:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கு இடையே மின்பகிர்வு செய்வதில் ஈடுபட்டுள்ள பவர் கிரிட் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனம் ஒரு மத்திய மின்பகிர்வு உபயோக நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் எலக்ட்ரிகல் பிரிவில் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பதவிக்கு எலக்ட்ரிகல், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், பவர் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது: பவர் கிரிட் நிறுவனத்தின் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க 31.12.2011 அன்று 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

இதர தேவைகள்: பி.இ., பி.டெக்., பி.எஸ்சி.,(இன்ஜினியரிங்) படிப்பை எலக்ட்ரிகல்,எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், பவர் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

ஏ.எம்.ஐ.இ., படிப்பை எலக்ட்ரிகல் பிரிவில் குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். கேட் (GATE) தேர்வின் மதிப்பெண் அடிப்படையிலும், குழு விவாதம், நேர்காணல் போன்றவற்றுடன் இதற்கான தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதர தகவல்கள் பவர் கிரிட் நிறுவனத்திற்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்தப் பதவிக்கு  விண்ணப்பிப்பவர்களுக்கு சில அடிப்படை உடல் தகுதியும் கூடுதலாகத் தேவைப்படும். முழுமையான விபரங்களைப் பெற இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.

இணையதள முகவரி: http://www.powergridindia.com/POWERGRID/Applications/RECTT07/ET-17/ET-17.pdf

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us