UPDATED : அக் 21, 2011 12:00 AM
ADDED : அக் 21, 2011 09:50 AM
அ நிறம் | அளவு
சென்னை : சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் இயங்கி வந்த, தொடக்க கல்வித்துறை இயக்குனரக அலுவலகம், இதே வளாகத்தில், வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரக கட்டடத்தில், தொடக்க கல்வித்துறை இயங்கி வந்தது. இங்கு, போதிய இட வசதியில்லாததால், வேறு கட்டடத்திற்கு மாற்ற வேண்டும் என்று, அதிகாரிகள், அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதற்கிடையே, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரக வளாகத்தில், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, இரண்டு தளங்களுடன் புது கட்டடம் கட்டப்பட்டது. இதில், முதல் மற்றும் இரண்டாம் தளத்தில், ஒரு பகுதி, தொடக்கக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டடத்திற்கு, தொடக்க கல்வித்துறை இயக்குனரக அலுவலகம் முழுவதும், தற்போது மாற்றப்பட்டுள்ளது.
