UPDATED : அக் 21, 2011 12:00 AM
ADDED : அக் 21, 2011 02:45 PM
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி விடுமுறைகளுக்குப் பிறகு வியாழக்கிழமை திறக்கப்பட்டது. மதுரைக் கிளை நீதிமன்றத்தின் உத்தரவின் படி, முதலாம் ஆண்டில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் நிபந்தனையுடன் இரண்டாமாண்டு வகுப்பில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் எட்வின் ஜோ கூறுகையில்,
முதலாமாண்டில் தேர்ச்சி பெறாத மாணவர்களிடம் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை ஏற்றுக் கொள்வேன் என்ற உறுதி மொழி பெறப்பட்டு, அவர்கள் இரண்டாமாண்டு வகுப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கென தனியாக வருகைப் பதிவேடும் வைக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை நீதிமன்ற உத்தரவைப் பொறுத்து அமையும்" என்றார்.
