பொதுத்தேர்வு எழுதுவோர் விவரங்களை ஒப்படைக்க உத்தரவு
பொதுத்தேர்வு எழுதுவோர் விவரங்களை ஒப்படைக்க உத்தரவு
UPDATED : அக் 22, 2011 12:00 AM
ADDED : அக் 22, 2011 10:07 AM
வரும் மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இதற்காக, மாவட்ட வாரியாக தேர்வெழுத உள்ள மாணவ, மாணவியரின் பெயர், பள்ளி, குரூப் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பட்டியலாக தயாரித்து, சி.டி.,யில் வழங்க வேண்டும் என தேர்வுத்துறை கூறியிருந்தது.
அதன்படி, இந்த விவரங்களை, வரும் 31ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, சி.டி.,க்கள், தேர்வுத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மீதமுள்ள மாவட்டங்களின், சி.டி.,க்களும், 31ம் தேதிக்குள், தேர்வுத்துறையிடம் ஒப்படைக்கப்படும். அதன் பின், இவை, டேட்டா சென்டரில் ஒப்படைக்கப்பட்டு, அங்கு மாணவர்கள் குறித்த விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடைபெறும். பிப்ரவரியில், மாணவர்களுக்கு பதிவெண்கள் வழங்கப்பட்டதும், அது குறித்த விவரங்கள் பின்னர், டேட்டா சென்டரில் இணைக்கப்படும்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவோர் விவரங்கள், தற்போது மாவட்ட அளவில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தகவல்களை, அடுத்த மாதம் இறுதிக்குள், தேர்வுத்துறைக்கு அனுப்பப்படும் என கூறப்படுகிறது.
