தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிப்பதன் சாதக அம்சங்கள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிப்பதன் சாதக அம்சங்கள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிப்பதன் சாதக அம்சங்கள்


UPDATED : அக் 29, 2011 12:00 AM

ADDED : அக் 29, 2011 12:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2011 12:00 AM ADDED : அக் 29, 2011 12:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குறிப்பாக அமெரிக்கப் பல்கலைக்கழகங்களை. என்ற கேள்விகளுக்கான பதிலை அறிந்துகொள்வதில் அனைவருக்குமே ஆர்வம் உண்டு. அதற்கான பதிலை வெர்ஜினியா பல்கலைக்கழகம், டார்டன் பி-ஸ்கூல் முதன்மையர் (டீன்) ராபர்ட் புரூனர் இங்கே தருகிறார்.

அப்படித் தேர்வு செய்வதற்கு மூன்று முக்கியக் காரணங்கள் உள்ளன. முதலாவது தனது எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ள முடியும். விசாலமான பார்வை ஏற்படும். வெவ்வேறு விதமான கலாச்சாரங்களைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அந்நிய மொழியைக் கற்றுக் கொள்ள முடியும். "பயணம் குறுகிய மனப்பான்மை, தவறான ஒரு சார்பு எண்ணம் போன்றவற்றைத் தகர்க்கும்" என்ற மார்க் ட்வைனின் பொன்மொழி இங்கு நினைவு கூரத்தக்கது. விசாலமான நோக்கு, உங்களின் வேலையைச் சிறப்பாகத் தொடரவும், கட்டமைத்துக் கொள்ளவும், சமூகத்தொடர்புகளை விரிவுபடுத்திக் கொள்ளவும் உதவுகிறது.

இரண்டாவதாக, சிறந்த பல்கலைக்கழகம் ஒன்றில் கற்கும்போது, உங்களின் இயலும் தன்மை அதிகரிக்கிறது. ஏராளமான அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. சர்வதேச அளவில் சிறந்த, மிகவும் பிரபலமான கல்வி நிறுவுனங்களில் படிக்க முடிகிறது. இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் பயிலும்போது உங்களின் சுயதிறனை, சர்வதேச ஒப்பீட்டளவில் பரிசோதித்துக் கொள்ளவும், மேம்படுத்திக் கொள்ளவும் இயலும். சர்வதேச அரங்கில் உங்களின் ஈட்டும் திறனும் அதிகரிக்கும்.

மூன்றாவது காரணம், சர்வதேச அளவிலான சந்தையில் உங்களை முன்னிறுத்திக் கொள்ள முடியும். உலகமயமாக்கல் இந்நூற்றாண்டைத் தனது கைக்குள் வைத்திருக்கும் நிலையில், இவ்வாறான கற்றல் மிக அவசியம் என்றே வல்லுனர்கள் கருதுகின்றனர். சவால்களையும், வாய்ப்புகளையும் அதிகமாகச் சந்திக்க முடியும். "சாலையில் பயணிக்கும் போதுதான் பள்ளத்தின் ஆழம் தெரியும்" என்ற சீனப் பொன்மொழி இதற்குச் சிறந்த உதாரணம்.

வீட்டுக்கு அருகிலேயே படிக்க வேண்டுமெனில் ஒரு கோணத்தில் மட்டுமே வாய்ப்பு. வெளிநாடுகளில் படிப்பது மற்றொரு கோணத்திலும் சிந்திக்கத் தூண்டும். இவற்றையெல்லாம் விட உங்களின் சொந்த அபிப்ராயம் மட்டுமே வெளிநாட்டில் படிக்கத் தூண்டும். நான் டார்டன் பள்ளியில் பல மாணவர்களை அவதானித்திருக்கிறேன். அவர்களிடம் ஒரு மேலாதிக்கப் பண்புக்கூறு இருக்கிறது.

அவர்கள் தன் சொந்த நாட்டில் இருந்து வெகுதூரத்தில் தங்கிப் படிக்கின்றனர். தங்களின் மொழி, பழக்க வழக்கம், கலாச்சாரம், உணவு, வாழ்க்கை முறை எனப் பலவற்றையும் கடந்தே இங்கு தங்கியிருக்கின்றனர். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் நிதி உதவியால் அவர்கள் பயிலக்கூடும். அவர்களின் சொந்தத்திறனும், ஊக்குதிறனும், நேர்மறையான சிந்தனையுமே இங்கு வரத்தூண்டியிருக்கிறது.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பயில்வதன் மூலம் நமது உண்மையான இலக்கைப் பற்றி உணர்ந்து கொள்ள முடியும்.

                                                                                                                                                                                      நன்றி: கேரியர்360

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us