UPDATED : அக் 29, 2011 12:00 AM
ADDED : அக் 29, 2011 05:39 PM
அ நிறம் | அளவு
தமிழக அரசுப் பணிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்கான அமைப்பான டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது பணியாளர் தேர்வுகளில் பல முறைகேடுகள் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி.யில் நடந்த ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்தி வரும் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் கண்காணிக்க உள்ளது. மேலும், தற்போதுள்ள டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடந்த நியமனங்களை ரத்து செய்யக் கோரி தமிழக அரசுக்கு நோட்டீசும் அனுப்பியுள்ளது.
