UPDATED : செப் 09, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இந்தியாவின் ராக்கெட்-ஏவுகணை தொழில்நுட்ப விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல்கலாம், இந்த புதிய பொறுப்பை ஏற்க சம்மதித்துள்ளார்.
உலகிலேயே முதல் ஸ்பேஸ் யுனிவர்சிட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள கலாம் வித்தியாசமான வேந்தராக இருப்பார். எதிர்கால விண்வெளி தொழில்நுட்பம் குறித்த ஆய்வுகளை அவர் மேற்கொள்ளப்போவதாகக் கூறியதாக இஸ்ரோ தலைவரும் விண்வெளி ஆய்வுத் துறை செயலருமான ஜி. மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
கலாமின் தலைமையில் இந்த விண்வெளி ஆய்வுக் கல்வி நிறுவனம் மேலும் மிகப் பெரிய சிகரத்தை எட்டப் போகிறது என்று ஐ.ஐ.எஸ்.டி., இயக்குநர் பி.என். சுரேஷ் நம்பிக்கைத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்ட ஐ.ஐ.எஸ்.டி., கல்வி நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக திகழ்கிறது. இங்கு ஏவியானிக்ஸ், ஏரோஸ்பேஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் நான்கு ஆண்டு பி.டெக். பட்டப்படிப்புகள் உள்ளன.
அத்துடன் அப்ளைடு சயின்சஸ் பாடப்பிரிவில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப்படிப்பும் இங்கு நடத்தப்படுகிறது. இந்த மூன்று படிப்புகளிலும் இந்த ஆண்டில் 150 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ரேடியே பிரிகியூவன்ஸி அண்ட் மைக்ரோவேவ், அடாப்டிவ் ஆப்டிக்ஸ், சாப்ட் கம்ப்யூட்டிங் ஆகிய துறைகளில் எம்.டெக்., படிப்புகள் தொடங்கப்பட உள்ளன.
வருகிற அக்டோபர் மாதத்தில் நடைபெறும் இந்த பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கிறார்.