தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ரயில்வே மெக்கானிக்கல் சிறப்பு பிரிவு அப்ரன்டிஸ்

ரயில்வே மெக்கானிக்கல் சிறப்பு பிரிவு அப்ரன்டிஸ்

ரயில்வே மெக்கானிக்கல் சிறப்பு பிரிவு அப்ரன்டிஸ்


UPDATED : நவ 10, 2011 12:00 AM

ADDED : நவ 10, 2011 12:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2011 12:00 AM ADDED : நவ 10, 2011 12:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய ரயில்வேயில் மெக்கானிக்கல் பிரிவில் சிறப்பு பிரிவு அப்ரண்டிஸ் பயிற்சியில் சேர, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ப்ளஸ் 2 கணித பாடத்துடன் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

17 வயது முதல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ஐந்து ஆண்டு சலுகையும், ஓ.பி.சி., பிரிவினருக்கு மூன்றாண்டு சலுகையும் உள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியில் 100 ரூபாய் செலுத்தி ஆன்லைன் மூலம் நவம்பர் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கணிதம், இயற்பியல், வேதியியல், ஆங்கிலம் மற்றும் பொதுத்திறன் ஆகியவற்றுக்கான எழுத்துத் தேர்வு ஆங்கிலத்தில் நடக்கும்.

தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு இந்திய ரயில்வே பணிமனைகளில் எழுத்து மற்றும் செய்முறை பயிற்சி வகுப்புகள் நான்காண்டுகள் நடத்தப்படும். பயிற்சியின் போது, ஊக்கத்தொகையாக மாதம் ரூ. 9,100 அளிக்கப்படும். எட்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இறுதியில் ராஞ்சியில் உள்ள பிர்லா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தால் பி.இ., மெக்கானிக்கல் முடித்ததுக்கான சான்று வழங்கப்படும்.

அதைத்தொடர்ந்து, இந்திய ரயில்வே துறைக்கு சொந்தமான பணி மனைகளில் மெக்கானிக்கல் இன்ஜினியர்களாக நியமனம் செய்யப்படுவர். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு உரிய தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பின்னர் விண்ணப்பித்த தகவலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us