தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விதிமுறைகளை தளர்த்தக் கோரும் நர்சிங் மாணவியர்

விதிமுறைகளை தளர்த்தக் கோரும் நர்சிங் மாணவியர்

விதிமுறைகளை தளர்த்தக் கோரும் நர்சிங் மாணவியர்


UPDATED : நவ 11, 2011 12:00 AM

ADDED : நவ 11, 2011 10:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2011 12:00 AM ADDED : நவ 11, 2011 10:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை : எம்.பி.பி.எஸ்., மாணவர்களைப் போல், பி.எஸ்சி., நர்சிங் மாணவியர், மருத்துவப் பல்கலை விதிகளுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., பல்கலை வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்கள் பல்கலை துணைவேந்தர் மயில்வாகனனை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்ததால், அவர்கள் கலைந்து சென்றனர்.

மாணவியரின் கோரிக்கை குறித்து, பல்கலை பதிவாளர் டாக்டர் சுதா சேஷய்யன் வெளியிட்ட அறிக்கை: பி.எஸ்சி. நர்சிங் மாணவியர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவியர் தங்களது கோரிக்கைகளை துணைவேந்தரிடம் கொடுத்தனர். இக்கோரிக்கைகள், வரும் டிசம்பர் 7 ல் நடக்கும், பல்கலை பாடத்திட்டக் குழுக் கூட்டத்தில் வைக்கப்பட்டு, விவாதிக்கப்படும். பாடத்திட்டக் குழுவின் பரிந்துரைகள், டிசம்பர் 29ல் நடக்கும் கல்வி நிலைக்குழுக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.

மாணவியரின் கோரிக்கைகள்:பி.எஸ்சி., நர்சிங் படிப்பில், ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டாலும், அடுத்த ஆண்டில் தொடர்ந்து படிக்க அனுமதிக்க வேண்டும். விடைத்தாள்களை மறுமறுப்பீடு செய்யும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும். எழுத்துத் தேர்வுக்கான மொத்த மதிப்பெண்ணை 75 ஆகக் குறைக்க வேண்டும். தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணை 35 சதவீதமாக்க வேண்டும். 90 சதவீத வருகை கட்டாயம் என்பதை மாற்ற வேண்டும். நர்சிங் ஆசிரியர்களே பாடங்களை சொல்லித் தர வேண்டும், வினாத்தாள் தயாரிக்க வேண்டும். டாக்டர்களைக் கொண்டு பாடங்களை நடத்தக்கூடாது. டாக்டர்களைக் கொண்டு வினாத்தாள் தயாரிக்கக் கூடாது.

ஒரு மாதம் கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறு சுதா சேஷய்யன் கூறியுள்ளார்.

எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு தேர்ச்சி பெறுவதற்கு, மருத்துவப் பல்கலை புதிய விதியை அமல்படுத்தியதை எதிர்த்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்னையில், மாநில அரசு தலையிட்டதால், புதிய விதியை பல்கலை இந்தாண்டு கைவிட்டது.எம்.பி.பி.எஸ்., மாணவர்களைத் தொடர்ந்து இப்போது, நர்சிங் மாணவியர் போராட்டம் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us